தமிழ்நாட்டில் வகுப்புவாத பதற்றங்களைத் தூண்டுவதா? இந்துத்துவா சக்திகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் கண்டனம்!
ஒற்றுமை காத்த மதுரை மக்களுக்குப் பாராட்டு
புதுதில்லி, டிச. 10 - தமிழகத்தில் மதவெறித் தீயை விசிறிவிட பாஜக மற்றும் இந்துத் துவா சக்திகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடதுசாரிக் கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் து. ராஜா, இந்தியக் கம்யூ னிஸ்ட் (மா-லெ-லிபரேசன்) கட்சி யின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, புரட்சிகர சோச லிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் மனோஜ் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் ஜி. தேவராஜன் ஆகியோர் கூட்டாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: அமைதியான சகவாழ்வின் அடையாளம் திருப்பரங்குன்றம் தமிழகத்தில், மதுரை மாவட் டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள மதத் தலங்களைச் சுற்றி ஒரு சர்ச்சையை உருவாக்கி, அரசியல் ஆதாயம் தேடுவதன் மூலம், தமிழகத்தில் மதவெறித் தீயை விசிறிவிட பாஜக மற்றும் பிற இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை இடதுசாரிக் கட்சிகள் வன்மை யாகக் கண்டிக்கின்றன. திருப்பரங்குன்றம் மலையில் மூன்று கோவில்கள், ஒரு தர்கா மற்றும் பல பழங்கால சமண குகை கள் உள்ளன. பல நூற்றாண்டு களாக, இந்த மலை சமூக நல்லி ணக்கம் மற்றும் அமைதியான சக வாழ்வின் சின்னமாக விளங்கு கிறது. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள், இங்கு பரஸ்பர மரியாதையுடன் தங்கள் மதக் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் எந்த விதமான பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மதவெறி சக்திகளுக்கு வாய்ப்பைத் தந்த தீர்ப்பு எனினும், தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில், பாஜக தலைவர்கள், இந்த ஆண்டு பிப்ரவரியில், அந்த இடத்தை “தெற்கின் அயோத்தி” என்று முத்திரை குத்தி, வெளியில் இருந்து நபர்களை அழைத்து வந்து, ஒரு பதற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். சூழலைக் கெடுக்க வும், ஒற்றுமையுடன் வாழும் மக்கள் மத்தியில் பிளவினை விதைத்திட வும் முயற்சித்தனர். இதற்கு சமூக ஊடகங்களையும் பயன்படுத்தினர். தற்போது, டிசம்பரில், இந்த விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற மதுரை அமர்வாயம், துர திர்ஷ்டவசமாக, முந்தைய நீதி மன்றத் தீர்ப்புகள், வரலாற்றுப் பதி வுகள் மற்றும் 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் (Places of Worship Act) ஆகியவற்றைப் புறக்கணித்துள் ளது. சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பிரிட்டிஷ் கால சர்வே தூணில் (survey pillar) கார்த்திகை தீபத்தை ஏற்ற மனுதாரரை அனு மதிப்பதன் மூலம், நீதிமன்றம் மத வெறி சக்திகளுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. திமுக அரசின் அணுகுமுறை பாராட்டுக்குரிய முன்மாதிரி மாநில அரசின் ஆட்சேபணை களையும், கோவில் நிர்வாகத்தின் ஆட்சேபணைகளையும் நிராகரித்த தனி நீதிபதி அமர்வு, மனுதாரரின் தீபமேற்றும் நடவடிக்கைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை (CISF) அனுப்பவும் ஆணையிட்டது. இந்த உத்தரவுகள் கடந்த கால தீர்ப்புகளை புறக் கணிப்பது மட்டுமல்லாமல், சட்டம் - ஒழுங்கு விஷயங்களில் மாநில அரசின் அதிகாரத்தை தவிர்ப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி உணர்வை அரித்து வீழ்த்திடும் செயலாகும். வெறுப்பை உமிழும் மதவெறி வெறுப்பு அரசியலுக்கு எதிராக ஒற்றுமையுடன் நின்றதுடன், மதவெறி சக்திகளால் திட்ட மிடப்பட்ட நடவடிக்கைகளைப் புறந்தள்ளி மாநிலத்தின் பன்முகத் தன்மையை உயர்த்திப்பிடித்த தற்காக மதுரை மற்றும் தமிழ்நாட்டு மக்களை இடதுசாரிக் கட்சிகள் பாராட்டுகின்றன. இந்த பிரச்ச னையை கையாள்வதில் மாநி லத்தில் உள்ள திமுக அரசாங்கத் தின் உறுதியான அணுகுமுறை முன் மாதிரியானது. இந்த விஷயத்தில் அஇஅதிமுக போன்ற கட்சிகள் வகுப்புவாத சக்திகளை ஆதரிப் பது கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியது ஆகும். சங்-பரிவார் அரசியலை நிராகரிக்க வேண்டும்! மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை இலக்கு வைப்பதையும், இந்துத் துவா குழுக்களால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக் கிறோம். மக்களின் வாழ்வாதாரங் கள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் மீதான மோடி அரசின் தொடர்ச்சியான தாக்குதலில் இருந்து பொதுமக்களின் கவ னத்தைத் திசைதிருப்ப முயலும் சங் - பரிவாரின் மதவெறி அரசி யலை, இந்தியாவின் அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற மனப்பான்மை கொண்ட மக்களும் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் சார் பில் அறைகூவல் விடுக்கின்றோம். இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. (ந.நி.)