tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான சிஆர்ஏ கூட்டத்தை உடனே நடத்துக!

சென்னை,பிப்.1- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ( TARATDAC)  மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகி யோர் ஜனவரி 30 அன்று தலை மைச் செயலகத்தில் மாற்றுத்திறனா ளிகள் துறை அரசு செயலாளர் சிஜி தாமஸ் வைத்தியனை சந்தித்து மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொ டுத்துப்  பேசினர். அந்த மனுவில், மாநிலம் முழு வதும் மாற்றுத்திறனாளிகள் சந்திக் கும் பிரச்சனைகளை பேசுவதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய மாநில வருவாய்த் துறை ஆணையர் தலைமையி லான கூட்டம் (CRA) கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட வில்லை. உடனடியாக இக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி குடும்பத்தில் உள்ள  தகுதி வாய்ந்த பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.    மாநிலம் முழுவதும் பல்வேறு கார ணங்களை கூறி நிறுத்தப்பட்டுள்ள உதவித்தொகையை உடனடியாக  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டை கள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் ஏஏஒய் (AAY) கார்டுகளாக வகை மாற்றம் செய்ய வேண்டும்.  பாதுகாவலர்களுக்கான உத வித்தொகை வேண்டி புதிதாக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக ளுக்கு ஓராண்டிற்கும் மேலாக உத வித்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல கடந்த நவம்பர் மாதம் தேர்ந்தெடுத்த சில மாற்றுத்திறனா ளிகளின் பாதுகாவலர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்துக் கான பராமரிப்பாளர் உதவித் தொகை இன்றுவரை வழங்கப்பட வில்லை. இவ்விரு பிரச்சனைகளை யும் உடனடியாக தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.