ஜெனின் அகதிகள் முகாமில் தூதர்கள் குழுவை நோக்கி துப்பாக்கிச் சூடு
இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்
ஜெனின்,மே 22- இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் மனிதாபிமான சூழலை பார்வையிடச் சென்ற குழுவினர் மீது இஸ்ரேல் ராணு வம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. தூதர்கள், பத்திரிகையாளர்கள் என 20 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இக்குழுவின் மீதான இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பாலஸ்தீன அரசின் ஏற்பாட்டில் ஜெனின் அகதிகள் முகாமில் உள்ள மனிதாபிமானச் சூழலை பார்வையிட இங்கி லாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஜப்பான், மெக்சிகோ, எகிப்து உள்ளிட்ட நாடுகளின் தூதர் கள் பங்கேற்றனர். தூதுக்குழு அனுமதியுடன் அங்கு சென்றிருந்தாலும் முகாமுக்குள் யாரும் வரக்கூடாது என எச்சரிக்கை என்ற பெயரில் மிரட்டல் விடும் வகையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் ராணு வம் அது மோதல் நடக்கும் பகுதி என்பதால் எச்சரிக்கைக்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என சமாளிப்பு பதிலை கூறி யுள்ளது. இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்திய உடன் அக்குழுவினர் உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பித்து ஓடிய காட்சிகள் காணொலியாக பதிவு செய்யப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த சம்ப வம் சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என கண்டித்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், எகிப்து,துருக்கி என அனைத்து நாடுகளும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளன.