அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை எட்டியது!
அமைச்சர் பெருமிதம்
சென்னை, ஜூலை 24 - தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தை எட்டியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ், தமது ‘எக்ஸ்’ பக்கத்தில், “தமிழ்நாடு முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக இதுவரை அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருக, கல்வியின் வழியே அறி வுலகை ஆள்க!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.