நாகர்கோவில், ஜுலை 7- கடற்கரையையும் கடல் வளத்தையும் தனியார் பெருநிறு வனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் அறிவிக்கப்பட்ட கட லோர மேலாண்மை சட்டத்தை திரும்ப பெறுமாறு மீன் தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க 11 வது மாவட்ட மாநாடு நாகர்கோவில் கஸ்தூரிபா மாதர் சங்க அரங்கில் நடைபெற் றது. மாவட்ட தலைவர் கே. அலெக்ஸாண்டர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செய லாளர் எஸ்.அந்தோணி, பொருளா ளர் பி.டிக்கார்தூஸ் ஆகியோர் அறிக்கைகளைமுன்மொழிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, முன்னாள் எம்பி எ.வி.பெல்லார்மின், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில தலைவர் ஜி. செலஸ்டின், மாவட்ட நிர்வாகிகள் கே.ஜார்ஜ், எஸ்.தங்கம், எஸ்.மேரி ஆகியோர் பேசினர். மாவட்ட தலை வராக கே.அலெக்ஸாண்டர், பொதுச்செயலாளராக எஸ்.அந்தோணி, பொருளாளராக பி. டிக்கார்தூஸ் உட்பட 45 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானங்கள் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்வு, சாலை வரி விதிப்பு போன்றவை மீனவர்கள், விவசாயிகள் , நடுத்தர வர்க்கத்தி னரை பொருளாதார ரீதியாக நசுக் கும் செயல். எனவே பெட்ரோல், டீசல் மீதான சாலை வரியை ரத்து செய்து விட்டு பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். கடற்கரையையும் கடல் வளத்தையும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் அறிவிக்கப்பட்ட கட லோர மேலாண்மை சட்டத்தை திரும்ப பெற்று கடலோரத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்கும் வகையில் 1993 ல் கொண்டுவரப் பட்ட கடலோர மண்டல ஒழுங்காற்று விதிகள் போன்று கடலோர மண்டல பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகள் முடிவடையாத நிலையில் திறப்பு விழா நடத்தப்பட்டது. எனவே பணி களை நிறைவு செய்து பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். துறைமுக பணிகளை விரைந்து முடிக்கவும் துறைமுக முகப்பு பகுதி யில் விசைப்படகு, வள்ளத்தில் மீன் பிடிக்க செல்ல தடையாக உள்ள மணல் மேடுகளை அகற்ற நிரந்தர மாக இயந்திரங்களை நிறுவவும் துறைமுக பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வா தார பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் குளம், ஆறு, அணைகளில் மீன்பிடிக்க அமலில் உள்ள தடைகளை அகற்றி உள் நாட்டு மீனவர்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.