tamilnadu

img

கந்தரும் சிக்கந்தரும்...!

கந்தரும் சிக்கந்தரும்...!

கந்தருக்கு காவடியும், சிக்கந்தருக்கு கந்தூரியும், கண்டு வந்தது அந்த மலை...!  பக்தியுடன் பக்தர்களும்  நேர்ச்சையுடன்  அத்தர் பூசியவர்களும் வந்து போன மலை..!  கார்த்திகை வந்தால் களை கட்டும் சந்தனக்கூடு அன்று அலைமோதும்  பங்காளிகள் கூடும் பாறை மலை..!  அந்த மலையில் இன்று.! தீபத்தை வைத்து தீங்கை  பற்ற வைக்க முயலும்  பரிவாரங்கள்...!  சதி திரிகளை எரிய விட்டு  குளிர்காய நினைக்கும்  நாக்பூர் விசுவாசிகள்...!  அறுபடை வீட்டில்  நுழைய முயலும் ஐந்தாம் படைகள்...!  இது தென்னகம்  நெருப்பைக் கொண்டே  நெருப்பை அணைப்போம்...