தலைமையாசிரியர் அறைக்குத் திடு திடுவென நாலைந்து மாணவர்கள் மூச்சு இரைக்க இரைக்க ஒடிவந்து நின்றனர். ”ஏய்….ஏன்டா இப்படி ஓடி வரீங்க? அப்படி என்ன தலைபோற செய்தி?”. ”அய்யா..எங்க வகுப்பு வேல்முருகன் எல்லாரையும் போட்டு அடிக்கிறான்.காலால எட்டி எட்டி உதைக்கிறான்.கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுறான்”என்றான் வந்தவர்களில் ஒருவன். “டேய்…அந்த வேல்முருகன் நோஞ் சான் மாதிரியில்ல இருப்பான்.அவன புடிச்சி இங்க அழச்சிகிட்டு வர வேண்டி யதுதானே?” ”ஐயா..நாங்க நாலஞ்சி பேர் சேர்ந்து முயற்சி பண்ணுனோம் ஆனா முடியல. என் முகத்துல ஓங்கி குத்து விட்டுட்டான்.இதோ பாருங்க செவந்து போச்சு “ முகத்தைக் காட்டினான். அப்போது இன்னொருவன் மெதுவான குரலில் “அவன் குடிச்சியிருக்கான் ஐயா… வாயிலேர்ந்து அந்த நாத்தம் வருது” என்றான்”அப்படியா!….“சரி..நீங்க எந்த வகுப்பு?” “ஐயா..நாங்க ஏழாம் வகுப்பு சி செக்சன்” “அது..மாடியிலல்ல இருக்கு.. வாங்க போவோம்” கூச்சல் போட்டுக் கொண்டிருந்தவர்கள் தலைமையாசிரிய ரைப் பார்த்தவுடன் சத்தமில்லாமல் அவ ரவர் இடத்தில் அமர்ந்தனர்.வேல்முருகன் மட்டும் அமராமல் லேசாகத் தள்ளாடிக் கொண்டு நின்றான். அவன் குடித்திருக்கிறான் என்று அப் போதே தலைமையாசிரியருக்குப் புரிந்து விட்டது.”டேய்..வேல்முருகா என்னோட வா!”என்று அழைக்கப் பெட்டிப் பாம்பாக அவர் பின்னே சென்றான்.
அறைக்குச் சென்று நாற்காலியில் அமர்ந்தவர்”டேய்..இங்க வா..பக்கத்தில உட்காரு”.பக்கத்தில் அமர்ந்தவனிடம்” நான் கேக்குற கேள்விக்கெல்லாம் மறைக்காம உண்மையைச் சொல்லனும் புரிஞ்சுதா?”சரி ஐயா”என்றான். நீ குடிச்சியிருக்கேன்னு நல்லா தெரி யுது. எப்ப குடிச்ச?எங்க குடிச்ச?யாரோட குடிச்ச?இதுக்கெல்லாம் சரியா பதில சொல்லனும்”. “ஐயா நான் வெளியில எங்கேயும் யாரோடையும் குடிக்கல.வீட்டுல தான் குடிச்சேன்.” ”என்ன வீட்டில குடிச்சியா?யாரு வாங்கிக் கொடுத்தது?” “யாரும் வாங்கிக் கொடுக்கல ஐயா..எங் கப்பாதான் நீ சரியா சாப்பிட மாட்டேங்கிற.ஒடம்பும் சத்து இல்லாம நோஞ்சனா இருக்கிற.அதனால நான் கொடுக்கிறத ராத்திரியில மட்டும் கொஞ்சமா மருந்து மாதிரி குடிச்சிட்டு அப்புற கொஞ்ச நேரங் கழித்து சாப்பிடு நல்லா பசிக்கும் நெறய சாப்பிடலாம்னு டெய்லி கொடுத்தாரு.அது மாதிரியே நல்லா பசிச்சிது நெறைய சாப்பிட்டேன்.தூக்கமும் நல்லா வருது.”என்றான். “சரி…ராத்திரியில கொடுத்தாரு..இப்ப பகல்லேயே குடிச்சியிருக்கியே எப்படி?” “ஐயா நேத்து ராத்திரி குடிச்சதுபோக மீதிய எங்கப்பா அலமாரியில வச்சியிருந்தாரு அத நான் காலையில குடிச்சுட்டு வந்தேன்” என்றான். “அப்படியா…இப்ப நீ வீட்டுக்குப் போ..நாளைக்கு உங்க அப்பாவோடத் தான் பள்ளிக்கு வரணும்.இல்லேன்னா நாளைக்கு டிசி கொடுத்து அனுப்பிவிடு வேன்”என்றவர்.”உங்க ஊர்லேந்து வர்ற பையன் உன் வகுப்பில யாராவது இருக்கானா?”என்று கேட்டார்.”ஐயா..வெங்கடேசன் எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரந்தான்”என்றான்.அலுவலக உதவியாளரை அழைத்து ஏழாம் வகுப்பு சி செக்சன்ல படிக்கும் வெங்கடேசனை அவன் பையை எடுத்துக் கொண்டு இங்கே அழைத்து வா”என்றார்.
வெங்கடேசன் வந்தவுடன்” வெங்க டேசா..வேல்முருகன அவன் வீட்டுக்கு அழச்சிகிட்டுப் போய் விட்டுட்டு..அவங்க வீட்டில இவனோட அப்பா,அம்மா யாரா வது இருந்தா நாளைக்கு இவன் பள்ளிக்கு வரும்போது அவன்கூட அவுங்க அப்பா கண்டிப்பா வரணும், அப்பாவோட வர லேன்னா டிசி கொடுத்து அனுப்பிடு வாராம்னு நான் சொன்னதா சொல்லிடு.” இருவரையும் அனுப்பிவிட்டு வேறு வேலையைப் பார்க்கத் தொடங்கியவ ருக்குப் பெற்றோரின் அறியாமை எந்த அள விற்குப் போய்விட்டது என்பதை நினைத்து வேதனைப் பட்டார். மறுநாள் காலையிலேயே வெங்க டேசன் அவன் அப்பாவோடு தலைமையாசி ரியர் அறைக்கு முன்னே நின்றான்.தலை மையாசிரியர் வகுப்புகளை மேற்பார்வை இட்டுவிட்டு அறைக்கு வந்தவர். ”வேல் முருகா…உங்க அப்பாவ அழச்சிகிட்டு உள்ள வா”என்றார்.
எண்ணெய் தடவாமலும் சீவாமலும் இருக்கும் தலையோடு,இடுப்பில் ஒரு பழைய லுங்கியைக் கட்டிக் கொண்டி ருந்தார்,குடித்துக் குடித்து உடல்நலம் பாதித்திருப்பதை அவர் முகம் காட்டி யது.”ஏங்க…நீங்க என்ன பண்ணுறீங்க?” ”ஐயா கொத்தனார் வேலைக்குப் போறேன்யா” “சரி..உங்களுக்கு எத்தனை பசங்க?” ஐயா…ஒரு பொண்ணு இவனுக்கு மூத்தவ,அப்புறம் இவந்தான்” “சரி..நீங்க குடிப்பீங்களா?” ஆமாம்யா…நாள் பூரா கஸ்டமான வேலைங்க உடம்பு வலிக்கும் ராத்திரி கொஞ்சம் சாப்பிட்டாத்தான் தூக்கம் வரும்.” நீங்க சொல்ற காரணம் சரியா இல்லியே…உங்களைவிட கடினமான வேலை செய்பவர்கள் எல்லாம் குடிக்கி றார்களா?..நீங்க குடிக்கிறதுக்கு ஒரு காரணத்த நீங்களே உண்டாகிட்டீங்க…”குடி குடியைக் கெடுக்கும்! குடிப்பழக்கம் உடல் நலத்திற்குக் கேடுன்னு”எல்லா இடத்திலேயும் எழுதிப் போட்டி ருக்காங்களே…அதயெல்லாம் படிக்கிறது இல்லியா?”நீங்க நல்லா இருந்தாத்தானே உங்க பையன,பொண்ண படிக்க வைத்து அவுங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியும். சரி….நான் விஷயத்துக்கு வர்றேன்.நீங்க குடிச்சி கெட்டுப் போறதில்லாம..உங்க பைய னுக்கும் அந்தப் பழக்கத்த,அதுவும் இந்த சின்ன வயசுல கத்துக் கொடுக்கி றீங்களே! இது ஒரு அப்பா செய்யிற வேலையா? என்றார். தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தவர்”ஐயா..இவன் சரியா சாப்பிடறதில்ல..நாளுக்கு நாள் மெலிஞ்சி கிட்டே போறான்.அதாலத்தான் சும்மா கொஞ்சமா டானிக் மாதிரி கொடுத் தேன்யா” “நீங்க இராத்திரி கொடுத்தீங்க நேத்து அவன் காலையிலேயே அதக் குடிச்சுட்டுப் பள்ளிக்கு வந்து ரகள பண்றான். எல்லா பசங்களையும் அடிச்சியிருக்கான், கெட்ட வார்த்தைகள்ல திட்டியிருக்கான்.” “ஐயா எனக்குத் தெரியாம அத செய்துட்டு வந்திருக்கான்யா” “அப்படித்தான் செய்வான் நீ..பழக்கத்த உண்டாக்கிவிட்ட அந்த போதை மயக்கத்து அடிமையா கிட்டான் அதான் உனக்குத் தெரியாம காலை யிலேயும் குடிச்சிருக்கான்” “இனிமே அப்படி நடக்காம பத்து கிறேன் ஐயா” மொதல்ல நீ குடிக்கிறத நிறுத்து.ஏன்யா…பையன் உடம்பு வீக்கா இருந்தா டக்டர்கிட்ட காட்டு.அவரு எழுதிக் கொடுக்கிற மருந்த வாங்கிக் கொடு.அத விட்டுட்டு இத கொடுக்கிறீயே அதுக்கு விஷத்தைக் கொடுத்தே கொன்னு டல்லாம்யா…உங்களப்போலப் பெற்றோர்களாலத்தான் பெரும்பாலான பிள்ளைகள் கெட்டுப் போகிறார்கள் என்று சொல்லி அனுப்பிவைத்தார் தலைமை யாசிரியர்.