டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும், அதை எதிர்த்து போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழங்க்கை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவொற்றியூரில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் எல்.பி.சரவணத்தமிழன், செயலாளர், ஜி.நித்தியராஜ், மாநில துணைத் தலைவர் ஆர்.அபிராமி, பொருளாளர் அ.விஜய், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் க.அகல்யா, நிர்வாகிகள் ஆ.இசக்கி நாகராஜ், புவியரசி, எஸ்.கார்த்தி, கு.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.