எல்ஐசி ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளியன்று (ஜன.10) சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய காப்பீட்டு ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை பகுதி தலைவர் நரசிம்மன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் எஸ்.சந்தானம் உள்ளிட்டோர் பேசினர்.