districts

img

தேர்தல் பணி கவுரவ ஊதியம் எப்போது கிடைக்கும்? குமுறும் காவலர்கள்

சென்னை, ஜன.10- இந்தியாவின் 18வது மக்களவையின் 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் 19 முதல் ஜூன்  1 வரை நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விள வங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள், காவல்துறை, ஊர்க்காவல் படை யினர் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோருக்கு பயிற்சிக் காலம், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு நாளில் எவ்வளவு படித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை தமிழக தேர்தல் துறை மற்றும் உள்துறை வெளியிட்டதுடன் அதற்காக ரூ.82.30 கோடி நிதிஒதுக்கீடு செய்தது. இதில், பணியாளர்களுக்கு படி யாக ஒதுக்கப்பட்ட தொகை வாக்குப்பதிவு முடிந்தவுடன் வழங்கப்படும். உள்துறை சார்பில், தேர்தல் பணியில் ஈடுபடும் 1,34,353 காவல்துறை, துணை ராணுவ படையினருக்கு ரூ.23.72 கோடி நிதி  ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் உள்ளூர், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, சிறப்புப் பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் களுக்கு ஒரு நாளைக்கு ரூ.450, தலைமை காவலர் முதல் காவலர் வரை ரூ.375, பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு ரூ.450 வீதம் 5 நாட்களுக்கு வழங்கப்படும். தீய ணைப்பு வீரர்கள், சிறைத்துறை வார்டன் களுக்கு தினசரி ரூ.375 வீதம் 4 நாட்களுக்கு, துணை ராணுவ படையினருக்கு தலா ரூ.200 வீதம் 4 நாட்களுக்கு வழங்கப் படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துவது, பறிமுதல் செய்வது மற்றும் தேர்தல் பணிகளை கண்காணிக்க பறக்கும் படைகளுடன் தமிழ்நாடு காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தனர். இவர்களில். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட மூன்று மக்களவை தொகுதிகளை சேர்ந்த சட்ட மன்ற தொகுதிகளில் ஒரு மாதம் பணி யாற்றிய காவல் பணியாளர்களுக்கு ஒன்றிய அரசின் தேர்தல் ஆணையம் வழங்கும் கவுரவ ஊதியம் இதுவரைக்கும் வழங்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலு வலகத்தில் இருந்து நிதி விடுவிக்கப்பட் டதாக கூறப்படும் நிலையில், தேர்தல் முடிந்து 9 மாதங்கள் கடந்தும் ஊதியம் கிடைக்க வில்லை என்று காவலர்கள் குமுறிக்  கொண்டுள்ளனர்.