tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்

ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் 1 லட்சம் கோடி ரூபாய் இடைவெளி உள்ளது. வேலை வாய்ப்பு, சிறந்த ஊதியம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மற்றும் இந்திய மக்கள் வாழ்வதை உறுதிசெய்ய அதிக அரசு செலவுகள் தேவைப்படும் நேரத்தில், ஒன்றிய அரசு பணக்காரர்களுக்கு சலுகை அளித்து வருகிறது. இது பணக்காரர்களால், பணக்காரர்களுக்கான பட்ஜெட் ஆகும்.

. காங்கிரஸ் மூத்த தலைவர்  பிரவீன் சக்கரவர்த்தி

அதானி, அம்பானிக்கு மட்டுமே வளர்ச்சி ஏற்படும் வகையில் இன்னும் குஜராத் முதல்வராக மட்டுமே செயல்படுகிறார் மோடி. அதனால் தான் ஒன்றிய பட்ஜெட் இப்படி உள்ளது.

சங்கராச்சார்யா அவிமுக்தேஸ்வரானந்தா

உத்தரப்பிரதேச பாஜக முதல்வர் ஆதித்யநாத் உண்மையான ஒரு துறவி என்றால், அவர் கும்பமேளா நெரிசல் இறப்புகளை 18 மணி நேரம் வதந்த என்று பொய் சொல்லியிருக்க மாட்டார். கும்பமேளாவில் 6 முறை நெரிசல் ஏற்பட்டது என்று ஒரு போலீசார் என்னிடம் கூறினார். முதல்வர் ஆதித்யநாத் எதையோ மறைக்கிறார்.

போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர்

கும்பமேளாவில் 2,700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு வீடியோ கூட வெளியிடப்படவில்லை? என்ன காரணம் என்று தெரியவில்லை.