ஏப்.15 முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்
சென்னை, ஏப்.6- இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15 ஆம் தேதியன்று தொடங்குகிறது. இந்த தடைக்காலம் 61 நாட்கள் அமலில் இருக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் வரும் 15 ஆம் தேதியன்று தொடங்கு கிறது. வரும் ஜுன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக் காலம் அமலில் இருக்கும். இந்தத் தடை காரண மாக, சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கட லூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட் டங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூரமிடப் பட்டு நிறுத்தப்படும். மீன்பிடி தடைக் காலத்தின் போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக நிறுத்தப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப் பட்டு வரப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகர ணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர்.