முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை
தருமபுரி மாவட்டத்தில் முள் ளங்கிக்கான விலை கடந்த சில நாட்களாகக் கடுமையாக சரிந்து வருவதால், அந்தப் பகுதியில் முள் ளங்கி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலையடைந்துள் ளனர். தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாக ரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர் மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் முள்ளங்கி சாகுபடிக்கு பெயர்பெற்றவை. இங்கு பயிரிடப்படும் முள்ளங் கியை தமிழகம் மட்டுமல்லாமல் வட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய் யப்படுகிறது. இந்த பயிர், விதையை நட்டு சுமார் ஒன்றரை மாதங்களில் அறுவடைக்கு தயா ராகும் தன்மை கொண்டது. இந்தக் குறுகிய வளர்ச்சி நேரத்தினால், இப் பயிர் விவசாயிகளுக்கு விரைவில் வருமானம் அளிக்கக்கூடியது என் பதால், விவசாயிகள் பலரும் இதை தேர்ந்தெடுத்து சாகுபடி செய்து வரு கின்றனர். இந்நிலையில், மாவட்ட உழவர் சந்தைகளில் முள்ளங்கியின் விலை திடீரென குறைந்திருப்பது, விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முள்ளங்கி ரூ.14க்கு விற்பனையா னது. ஆனால், தற்போது அது ரூ.10 ஆக குறைந்தது. மேலும், சந்தை யில் வியாபாரிகள் விவசாயிகளிட மிருந்து முள்ளங்கியை ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். இதனுடன், முள்ளங்கிக்கு மாற் றாக பயிரிடப்படும் பீன்ஸின் விலை யும் கடுமையாகக் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ரூ.130க்கு விற்பனையான பீன்ஸ், தற்போ ரூ.60க்கு விற்பனையானது. இது சரிபாதியாக விலை குறைந்துள் ளது. விலை சரிவுக்கு முக்கிய கார ணமாக, ஒரே நேரத்தில் பலர் முள் ளங்கியை பெரும் அளவில் சாகுபடி செய்ததையும், அதன் விளைவாக சந்தையில் வரத்து அதிகரித்ததை யும் வியாபாரிகள் குறிப்பிடுகின்ற னர். முள்ளங்கி மற்றும் பீன்ஸ் விலை திடீரென சரிந்துள்ளதால், விவசாயி கள் விவசாயிகள் வருமான இழப் புக்கு உள்ளாவதோடு, எதிர்கால சாகுபடித் திட்டங்களிலும் குழப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. விவ சாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்திருப்பதும், வருமானம் இல்லை என்பதும் பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. விலை நிலைத்தன்மையை உரு வாக்கும் வகையில் அரசு தலையீடு செய்து, விவசாயிக ளுக்கு உரிய ஆதரவு வழங்க வேண்டும் என்பதே தற்போது கோரிக்கையாக உள்ளது.