tamilnadu

கலை இலக்கிய நூல் விமர்சனப் போட்டி துரை.அறிவழகனுக்கு முதல் பரிசு

கலை இலக்கிய நூல் விமர்சனப் போட்டி 
துரை.அறிவழகனுக்கு முதல் பரிசு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம், அறம் கிளை சார்பில் கலை இலக்கிய நூல் விமர்ச னப் போட்டியில் துரை.அறிவழக னுக்கு

முதல் பரிசு

அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அறம் கிளை தலைவர் அ.உமர் பாரூக், செயலாளர் பொ.பிரேமாவதி, பொருளாளர் சி.பேரின்பராஜன் ஆகியோர் கூறிய தாவது, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்- கலைஞர்கள் சங்கம், அறம் கிளை சார்பாக 2019 ஆம் ஆண்டு முதல் கலை  இலக்கிய நூல் விமர்சனப் போட்டி  நடத்தப்பட்டு வருகிறது. ஆறாவது  ஆண்டு விமர்சனப் போட்டியில் ‘எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன் படைப்புலகம்’ என்ற தலைப்பில் விமர்சனப் போட்டி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான கட்டுரைகள் வந்திருந்தன. விமர்சன போட்டியில் தமுஎகச மாநில துணைச் செயலாளர் எழுத்தாளர் ம.மணிமாறன் நடுவராக இருந்து மூன்று கட்டுரைகளை தேர்வு செய்தார். முதல் பரிசு ‘பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்’ என்னும் கட்டுரைக்கு காரைக்குடியை சேர்ந்த எழுத்தாளர் துரை.அறிவழகன் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டார். அவ ருக்கு ரூ. 7 ஆயிரம் பரிசு வழங்கப்படு கிறது. இரண்டாம் பரிசு ‘ஆலயமும் ஆகமமும்’ என்னும் கட்டுரைக்கு சென்னையைச் சேர்ந்த ப்ரியா ஜெய காந்த்  ரூ.5 ஆயிரம் பரிசு பெறுகிறார்.  மூன்றாம் பரிசு ‘சைவ வைணவப் போராட்டங்கள் ஒரு மறுவாசிப்பு’ என்னும் கட்டுரைக்கு தூத்துக்குடி யைச் சேர்ந்த ஏ.சாந்தி பிரபு ரூ.3 ஆயிரம் பரிசு பெறுகிறார்.

தோழர் சே.அருண்குமார் நினைவு தொல்லியல் விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம், அறம் கிளை சார்பாக 2023ஆம் ஆண்டு முதல் தோழர் சே.அருண்குமார் நினைவு தொல்லியல் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது தேர்வுக்கு அனுப்பப்பட்ட நூல்கள் தொல்லியலா ளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு பரி சீலிக்கப்பட்டு நூல் தேர்வு செய்யப் பட்டது. இதற்கு தொல்லியல் ஆய்வா ளர் பாவெல் பாரதி பெரும் உதவி யாக இருந்தார். இந்நிலையில், 2024ஆம் ஆண்டு  சே.அருண்குமார் நினைவு தொல்லியல் விருதுக்கு சு.சிவா எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட “பழங்குறியீடு கள் கலைக் களஞ்சியம்” என்னும் நூல் தேர்வு செய்யப்பட்டது. இந்த நூலுக்கு  ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசளிப்பு விழா

தேர்வு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வருகிற மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மைய வளாகத்தில் நடைபெறுகிறது.