tamilnadu

img

விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் 2026 சுவிட்சர்லாந்திற்கு முதல் தங்கம்

25ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலி நாட்டின் மிலன், கார்டினா நகரில் நடைபெற்று வரு கிறது. சான் சிரோ நகரில் பிரம்மாண்ட தொடக்க நிகழ்வுகளுடன் பிப்., 6ஆம் தேதி வரை தொடங்கிய இந்த தொடர், பிப்., 22 வரை 16 நாட்கள் நடைபெறுகிறது. நிறைவு விழா வெரோனா நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரின் முதல் தங்கத்தை சுவிட்சர்லாந்து தட்டிச் சென்றது. ஆடவர் அல்பைன் ஸ்கீயிங் (பனி படர்ந்த மலைச்சரிவுகளில் மிக அதிவேகமாக சறுக்கி வருவது) பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் பிரான்ஜோ வான் ஆல்மென் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு வெறும் 22 வயதாகுகிறது. அதே போல போட்டியை நடத்தும் இத்தாலி நாட்டின் வீரர்களான ஜியோவானி பிரான்சோனி வெள்ளிப்பதக்கத்தையும், டொமினிக் பாரிஸ் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி னர். பொதுவாக ஒலிம்பிக் தொடர்களில் அதிக பதக்கம் வெல்லும் நாடுகளைப் போல, தொடரின் முதல் தங்கம் வெல்லும் நாடும்  சிறப்பு பெருமையை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் நெதர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் திணறல் 

10ஆவது சீசன் ஆடவர் டி-20 உல கக்கோப்பை கிரிக் கெட் தொடர் சனியன்று இந்தியா - இலங்கையில் தொடங்கியது.  இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ் தான் - நெதர்லாந்து அணி கள் மோதின. இலங்கை நாட்டின் கொழும்பு மைதா னத்தில் நடைபெற்ற இந்த  ஆட்டத்தில் டாஸ் வென்ற  பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கள மிறங்கிய (பேட்டிங்) நெதர் லாந்து அணி 19.5 ஓவர்க ளில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நெதர்லா ந்து அணியை பாகிஸ்தான் அணி 150 ரன்களுக்குள் சுருட்டினாலும், அந்த அணி யின் மிடில் ஆர்டர் வீரர்கள் அபார ரன் குவிப்பால், பாகிஸ்தான் அணிக்கு தொ டக்கத்தில் கலக்கத்தை ஏற்படுத்தினர். 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொ டக்கத்தில் நன்றாக விளை யாடினாலும், 10ஆவது ஓவ ருக்குப் பின் கடுமையாக திணறியது. எனினும் திக்கித் திணறி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. முன் னாள் சாம்பியனான பாகிஸ் தான் அணி, பலம் குறைந்த நெதர்லாந்து அணியிடம் போராடி வெற்றி பெற்றது கிரிக்கெட் உலகில் கடும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் இடம் : சென்னை, தமிழ்நாடு நேரம் : காலை 11:00 மணி இங்கிலாந்து - நேபாளம் இடம் : மும்பை - மகாராஷ்டிரா நேரம் : மதியம் 3:00 மணி இலங்கை - அயர்லாந்து இடம் : கொழும்பு - இலஙிகை நேரம் : இரவு 7:00 மணி