சாத்துர்:
சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில்உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆனது.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது அச்சங்குளம். இங்கு தனியாருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை உள்ளது. இங்கு கடந்த பிப்.12- ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்நது அரசு மற்றும்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜெயந்திமாலா, ஜெயா, காளியப்பன், ராஜம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த அந்ததோணி என்ற மைக்கேல்ராஜ் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நடுச்சூரங்குடி கிராமத்தில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.