குடும்ப அட்டையில் மார்ச் 31-க்குள் கைரேகை பதிவது கட்டாயம் பெரம்பலூர்,
மார்ச் 18 - பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைத்தாரர்கள், தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையை 31.3.2025-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும். மேலும் பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் வேலை நிமித்தமாகவும், கல்லூரி படிப்பிற்காக தங்கியுள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அவர்களுக்கு அருகாமை யில் உள்ள நியாய விலைக் கடையில் ஆதார் நகலுடன் சென்று e-KYC பதிவு செய்து கொள்ளலாம். நியாய விலை கடை விற்பனை முனைய இயந்திரத்தில் e-KYC பதிவு செய்யும்போது விரல் ரேகை பதிவு ஆகாத நபர்கள், அரு காமையில் உள்ள இ-சேவை மையத்தில் தங்களது கை ரேகையினை புதுப்பித்த பின்பு e-KYC பதிவு செய்து கொள்ளலாம். பள்ளி-கல்லூரிகளில் படித்து வரும் மாணவ-மாண வியர்கள் விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் கட்டாயம் தங்களது கைரேகையை 31.3.2025-க்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
மார்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழி சட்ட வாரம்
மயிலாடுதுறை ஆட்சியர் தகவல் மயிலாடுதுறை, மார்ச் 18 - தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் மார்ச் 21 முதல் மார்ச் 28 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு ‘ஆட்சி மொழிச் சட்ட வாரம்’ கொண்டாடப்பட உள்ளது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரி வித்துள்ளர். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 21 முதல் 28 வரை மயிலாடுதுறை மாவட்டத் திலுள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சி மொழிச் சட்ட வாரத்திற்கான ஒட்டு வில்லைகளை ஒட்டி யும், துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்படவுள்ளது. அரசுப் பணியாளர்களுக்கு கணினித் தமிழ், ஆட்சி மொழிச் சட்டம், வரலாறு, பிழையின்றி தமிழில் குறிப்பு கள், வரைவுகள் எழுதுதல் குறித்து பயிற்சியளித்தும், வணிக நிறுவன உரிமையாளர்களுடன் தமிழில் பெயர்ப்பலகைகள் வைப்பது தொடர்பான கூட்டம் நடத்தியும், ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பான விழிப்பு ணர்வுப் பேரணியில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர் கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு ஆட்சிமொழிச் சட்ட வாரத் தினைச் சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பி னரும் ஒத்துழைப்பு நல்குமாறு” தெரிவித்துள்ளார்.
மார்ச் 23-இல் கிராம சபைக் கூட்டம்
திருச்சி ஆட்சியர் தகவல் திருச்சிராப்பள்ளி, மார்ச் 18 - திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினமான மார்ச் 22 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களினால் மார்ச் 23 ஆம் தேதி நடைபெற வுள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் பனிப்பாறை பாது காப்பு என்ற சிறப்பு கருப்பொருளில், அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து இலக்கினை அடைதல், கிராம ஊராட்சியில் 1.4.2024 முதல் 28.2.2025 வரை உள்ள கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கைக்கு கிராம சபையில் ஒப்புதல் பெறு தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மார்ச் 23 அன்று காலை 11 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள் பெயரை நீக்கம் செய்ய சாலையோர வியாபாரிகளுக்கு அழைப்பு திருச்சிராப்பள்ளி, மார்ச் 18 - திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் நடைபாதை விற்பனையை ஒழுங்கு படுத்துதல் மற்றும் அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளின் அவசர அவசியம் கருதி, இம்மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 6220 சாலையோர வியாபாரிகளின் வாக்காளர் பட்டியல் விவரங்கள் இம்மாநகராட்சியின் அனைத்து வார்டு குழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை 7.3.2025 அன்று வழங்கிய தீர்ப்பின்படி சாலையோர வியா பாரிகளின் வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள் பெயரை நீக்கம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனவே இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய அனைத்து வார்டு குழு அலுவலகங்களில் மார்ச் 19 முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை மாநகராட்சி அலு வலர்கள் மூலம் ஆய்வு செய்து சரிபார்க்கப்பட உள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்க விரும்பும் வியாபாரிகள்/நபர்கள் சம்மந்தப்பட்ட வார்டுகுழு அலுவலக உதவி ஆணையரிடம் உரிய சான்று மற்றும் ஆவணங்களுடன் மார்ச் 19 முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.