tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள

புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு

புதுச்சேரி, பிப். 14- எஸ்ஐஆர் பணிகளுக்குப் பிறகு புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப் பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பரில் வெளியான நிலையில் இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் கடந்த டிச. 16 ஆம் தேதி  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டு, பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில்  சனிக்கிழமை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி, காரைக்கால் என மொத்த முள்ள 30 தொகுதிகளில் தற்போது 9,44,211 வாக்கா ளர்கள் உள்ளனர். இவர்களில் 4,43,595 ஆண்கள், 5,477  பெண்கள், 139 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். புதிதாக  41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதிப் பட்டியலில் தகுதியுள்ள 42,719 வாக்கா ளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 16,619 வாக்காளர் கள் நீக்கப்பட்டுள்ளனர். பகுதி வாரியாக புதுச்சேரியில் 7,21,296 வாக்காளர்களும், காரைக்காலில் 1,55,515 வாக்காளர்களும், மாஹியில் 29,736 வாக்காளர்களும், யானத்தில் 37,664 வாக்காளர்களும் உள்ளனர். தமிழகத்தில் கடந்த டிச. 19 ஆம் தேதி வரைவு வாக்கா ளர் பட்டியல் வெளியான நிலையில், பிப்.17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப் பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களிலும், அந்த மான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய 3  யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் சிறப்பு தீவிர  திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு  வருகிறது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியமில்லை!  ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை, பிப்.14 - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக தோல்வி பயம் காரணமாக ரூ.5 ஆயிரம்  கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே  என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நாங்கள் இப்போது கொடுக்க வில்லை. மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கிறோம். அதிமுக, பாஜக-வுடன் சேர்ந்து கொண்டு இந்த திட்டத்தை தடுக்க சதி திட்டம் தீட்டினார்கள். அந்த சதி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்ததால் அதற்கு தடை வாங்கி விடக் கூடாது என்பதற்காக முன்  கூட்டியே பணத்தை கொடுத்துள்ளார் என்றார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று  முதலமைச்சர் அறிவித்த பிறகும் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பாக மீண்டும் பேசுகிறார்களே என்ற கேள்விக்கு, இன்றிருந்து யாரும் பேச மாட்டார்கள்.  5 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகு மக்களுடைய மன நிலை எப்படி இருக்கிறது என்பது எல்லா அரசியல்வாதி களுக்கும் தெரியும். அதனால் இனி பேசமாட்டார்கள் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக, கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்பதை  தெளிவுபடுத்திவிட்டார். ராகுல்காந்தி முதல் மற்ற வர்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். காங்கிர சில் ராகுல்காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால்  பதில் சொல்லலாம். எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி. ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் அனைவரும் இப்போது சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். திருச்சி மாநாட்டில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற் பார்களா என்ற கேள்விக்கு, தலைவர் அது பற்றி சொல்வார் என்று அவர் பதிலளித்தார்.

புதிதாக உருவாகிறது  குறைந்த காற்றழுத்த தாழ்வு

சென்னை: இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரி வித்துள்ளது. பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு  பகுதிகள் மற்றும் அத னை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவு கிறது. இதன் காரண மாக அடுத்த 48 மணி நேரத்தில் பிப்.15-இல்  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. பிப்.14-இல் தென் தமிழகத்தில் ஓரிரு இடங் களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமி ழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நில வக் கூடும். பிப்.15-இல்  தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல் வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான  மழை பெய்யக் கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.

முதல்வர் தீர்வு காண்பார்: அமைச்சர் உறுதி

தஞ்சாவூர்: தஞ்சாவூ ரில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழி யன் அளித்த பேட்டியில் கூறியதாவது:  தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.56 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு இன் றைக்கு அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது.  அரசு கல்லூரிகளில்  கவுரவ விரிவுரையா ளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கவுரவ விரிவுரையா ளர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட சம்பளம் ரூ.15,000 மட்டுமே. தற் போதைய அரசு இரண்டு  முறை தலா ரூ.5,000 என உயர்த்தி வழங்கி யுள்ளது. இது போதிய ஊதியம் என நான் கூற  விரும்பவில்லை. ஆனால், அவர்களு டைய கோரிக்கையை முதல்வரிடத்தில் எடுத்துச்  சொல்லி உள்ளோம். முதல்வர் விரைவில் தீர்த்து வைப்பார். தற்போது வரை 31  மாதங்களுக்கு பெண் களுக்கு உரிமைத் தொ கையை முதல்வர் தந்து உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு என்பது மகளிர்  நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.