tamilnadu

நுண்நிதி நிறுவன மிரட்டலால் விவசாயி தற்கொலை

நுண்நிதி நிறுவன மிரட்டலால் விவசாயி தற்கொலை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை, மே 2 - ஈக்விடாஸ் நுண்நிதி நிறுவன மிரட்டலால்  விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து மே 5 அன்று வாழப்பாடி யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலப்  பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், கொட்டவாடி ஊராட்சி பித்தியாம்பாளையம் கிழக்குக்காட்டைச் சேர்ந்தவர் விவசாயி வடி வேலு. இவர் வாழப்பாடி ஈக்விடாஸ் வங்கி யில் விவசாயக் கடனாக ரூ.5 லட்சம் பெற்று,  30 தவணைகளை இதுவரை முறையாக கட்டி  வந்துள்ளார்.  கடந்த மாத தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், வங்கி அதிகாரி கள் கடனை கட்டச்சொல்லி மிரட்டி உள்ளார்கள். மேலும் 30.04.2025 அன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று, ஊர் பொதுமக்கள் மத்தியில்  கடுமையான வார்த்தைகளால் திட்டி அவ மானப்படுத்தியுள்ளார்கள். இதனால் மிகுந்த  மன உளைச்சலுக்கு ஆளாகி வேறு வழி யின்றி விவசாயத்திற்கு வாங்கிய மருந்தை  குடித்து தற்கொலை செய்து கொண்டு விட்டார் வடிவேலு. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில்தான் இதுபோன்று வரம்பு மீறி, கடன் வசூல் செய்வதைத் தடை  செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டம் அமலாவதற்கு முன், விவசாயியின் உயிரைப் பறித்த வங்கி அதிகாரிகள் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும், புதிய சட்டத்தின்படி உரிய சட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து  நடந்து வருவதால்தான், தமிழ்நாடு அரசு தற்போது கட்டாய கடன் வசூல் தடை சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ளது. ஈக்விடாஸ் வங்கி அதிகாரிகள் மீது காவல் துறை, தற்கொலை முயற்சிக்கு தூண்டிய தாக மட்டுமே சாதாரணமாக வழக்குப் பதிந் துள்ளதை ரத்து செய்து, தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி, சம்பந்தப் பட்ட ஈக்விடாஸ் வங்கி அதிகாரிகள் மீது புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்குவதுடன், கடன் முழுவதை யும் தள்ளுபடி செய்திட வேண்டும்.  விவசாயி வடிவேலு தற்கொலைக்கு காரணமான ஈக்விடாஸ் நிதி நிறுவனத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மே 5 ஆம் தேதி வாழப்பாடியில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் என்பதை தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.