tamilnadu

img

கண்ணீரின் வழியே புன்னகையுடன் கூடிய ஆற்றல் - எம்.ஜே.பிரபாகர்

கண்ணீரின் வழியே புன்னகையுடன் கூடிய ஆற்றல் 

இந்திய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சிவராஜ் வி. பாட்டில் அவர்களின் சுயசரிதை யான “கடந்த நேரமும் நடந்த தூரமும்”, வறுமையிலிருந்து நேர்மையின் துணையோடு உச்சம் தொட்ட ஒரு மனிதரின் உன்னத சாட்சியமாகும். கர்நாடகா வின் குக்கிராமத்தில் எளிய பின்னணியில் பிறந்து, மாட்டு வண்டியில் பள்ளிக்குச் சென்று, பின்னாளில் நாட்டின் உயரிய உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த இவரது பயணம் ஒவ்வொருவருக்குமான உத்வேகத்தின் ஊற்று. கர்நாடக மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய இவரது தீர்ப்புகள் பெரும்பாலும் சமூக நீதி, தனிநபர் சுதந்திரம் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களையே மையமாகக் கொண்டிருந்தன.

 மனிதாபிமானமும் நீதித்துறையும்  சட்டத்தை வெறும் உலர்வான விதிகளாகப் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் மனிதாபிமானத்தை அவர் கையாண்ட விதம் தனித்துவமானது.  ஸ்பெக்ட்ரம் முறைகேடு களை ஆய்வு செய்த ஒரு நபர் குழுவின் தலைவராக வும், கர்நாடக லோக் ஆயுக்தா மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணை யத்தின் தலைவராகவும் இவர் ஆற்றிய பணிகள் இந்திய நீதித்துறையில் குறிப்பிடத்தக்கவை. குறிப் பாக, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்ளாகிப் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததில் இவரது பங்கு மகத்தானது.

தமிழகத்தைத் தனது “இரண்டாவது தாய்வீடு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் இவரது எழுத்துக்களில், மெட்ராஸ் உயர் நீதிமன்றப் பணிக்கால நினைவுகளும் தமிழக மக்கள் மீதான மாறாத அன்பும் மிக அழகாகப் பதிவாகியுள்ளன.  காலம் கடந்த விழுமியங்கள்  ஒரு நீதிபதிக்கே உரிய நிதானத்துடனும், அதே சமயம் சாமானியனின் உணர்வுகளுடனும் எழுதப்பட்டுள்ள இந்த நூல், ஒரு சிறந்த ஆளுமை எப்படி உருவாகிறது என்பதை விளக்குகிறது.

வெறும் காலவரிசைப்படி எழுதப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டுமின்றி, ஒரு மனிதனின் கொள்கைப் பயணமாக இந்நூல் மிளிர்கிறது. குறிப்பாக, குடும்ப நல நீதிமன்றங்களில் குழந்தைகளின் நலனே  முதன்மையானது என்று இவர் வழங்கிய தீர்ப்புகள் இன்றும் வழிகாட்டிகளாக உள்ளன.

சட்டப் பயிலும் மாண வர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழும் இந்தப் புத்தகம், கடின உழைப்பும் ஒழுக்கமும் இருந்தால் எத்த கைய உயரத்தையும் எட்டலாம் என்பதை உரக்கச் சொல்கிறது. நீதிபதி சிவராஜ் வி. பாட்டில் அறக்கட்டளையின் பெரும் முயற்சியால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இப்படைப்பு, இன்றைய தலைமுறை வாசிக்க வேண்டிய விழுமியங்களின் காலப்பெட்டகம்.