tamilnadu

img

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிப்பு தேர்தல் ஆணையம் பாஜக கைப்பாவையாகக் கூடாது!

12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அறிவிப்பு  தேர்தல் ஆணையம் பாஜக கைப்பாவையாகக் கூடாது!

திருவனந்தபுரம், அக். 28 - 12 மாநிலங்கள் - யூனியன் பிர தேசங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) மேற் கொள்ளப் போவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, ஜன நாயக நடைமுறைக்கு விடப்பட்டுள்ள சவால் என்று கேரள முதல்வர் பின ராயி விஜயன் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம், ஒன்றிய ஆளும் கட்சியின் கைப்பாவை அமைப் பாகக் கூடாது என்றும் அவர் கண்டித் துள்ளார்.

 இதுகுறித்து பினராயி விஜயன் தமது முகநூல் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: வாக்காளர் தின முழக்கமும், 65 லட்சம் பேர் நீக்கமும்.. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செயல்படுத்தப் படும் என்று இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்திருப்பது ஜனநாயக செயல்முறைக்கு ஒரு சவாலாகும்.  “வாக்களிப்பதைப் போன்றது எதுவும் இல்லை, நான் நிச்சயமாக வாக்களிப்பேன்” (‘Nothing Like Voting, I Vote For sure’) என்பது 2024-ஆம் ஆண்டு வாக்காளர் தினத்தின் செய்தி.

அது நாடு முழுவதும் பிரச்சா ரம் செய்யப்பட்டது.  அதைப் பிரச்சாரம் செய்தவர் களே, பீகாரில் 65 லட்சம் பேரை  வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினர்.  குடிமக்கள் பதிவேட்டை குறுக்குவழியில் புகுத்துவதா? அரசியலமைப்புச் சட்டத்தின் 326-ஆவது பிரிவின் கீழ் குடிமக்க ளுக்கு உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ள உலகளாவிய வாக்க ளிக்கும் உரிமையை முழுமையாக மீறு வதாகும். ஒரு குடிமகனின் அடிப் படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை அரசியல் நலன்களின்படி பறிக்க முடியாது. எஸ்ஐஆர் செயல் முறை தேசிய குடிமக்கள் பதிவேட்டை குறுக்கு வழியாக செயல்படுத்தும் நோக்கம் கொண்டது என்ற கவலை இங்கு வலுவடைந்து வருகிறது. எஸ்ஐஆர் மூலம் தங்களுக்கு ஏற்ற வகையில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்க ஒன்றிய அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து வருகின்றனர் என்ற விமர்சனம் எந்த வகையிலும் மறுக்கப் படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.  

பட்டியல் தயாரிப்பில்  இவ்வளவு அவசரம் ஏன்? பீகார் எஸ்ஐஆர்-இன் அரசிய லமைப்புச் சட்ட செல்லுபடித் தன்மை உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இருந்தாலும், அதே செயல்முறையை மற்ற மாநிலங்களுக்கும் விரிவு படுத்துவதை குற்றமற்றதாகக் கருத முடியாது. நீண்டகாலத் தயாரிப்பும் ஆலோசனைகளும் தேவைப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு மற்றும் தீவிரமான திருத்தப் பணியானது, மக்க ளின் விருப்பத்தைத் தகர்க்கும் விதத்தில் அவசரகதியில் மேற் கொள்ளப்படுகிறது என்பது தெளி வாகிறது. சந்தேகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1950, மற்றும் வாக்காளர் பதிவுச் சட்டம்- 1960 ஆகியவற்றின் படி,  தற்போதுள்ள பட்டியலின் அடிப்படை யிலேயே வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்.

 ஆனால், தற்போதுள்ள வாக்காளர் பட்டியல்களுக்குப் பதிலாக 2002-2004 பட்டியலை அடிப்படையாகக் கொண்டு ஒரு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் போது சிறப்பு தீவிர திருத்தம் சாத்தியமற்றது என்று மாநில தேர்தல் அதிகாரியே தெரிவித்திருந்தாலும், எஸ்ஐஆர் செயல்முறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்ற வலி யுறுத்தல் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஒன்றுபட்டுக் குரல் எழுப்புவோம்! தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மையையே பாதிக்கும் இத்தகைய முடிவுகளில் இருந்து ஆணையம் விலக வேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற நிறு வனங்கள் ஒன்றியத்தில் ஆளும் கட்சி யின் கைப்பாவைகளாக மாற அனு மதிக்கக்கூடாது.  எஸ்ஐஆர்-க்கு எதிராக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றிய ஒரே மாநிலம் கேரளம். ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆர்வ முள்ள அனைவரும் எஸ்ஐஆர் செயல்முறையின் இரண்டாம் கட்டத்திற்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தீய சதித்திட்டப்படி செயல்படும் தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான, இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பு, அதன் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், தமது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்ப தாவது: ஜனநாயக நடைமுறைகளுக்கு அப்பட்டமான அவமதிப்பு “12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) அறி வித்திருப்பது மிகவும் ஆட்சேபனைக் குரியது. பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  வழக்கை உச்சநீதி மன்றம் விசாரித்து வரும்நிலையில், தேர்தல் ஆணையம் மேலும் பல மாநிலங்களில் அவசரமாக இந்தத் திருத்தத்தை மேற்கொள் வது, ஜனநாயக நடைமுறைகளை அவர்கள் அப்பட்டமாக அவ மதிப்பதையே காட்டுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிரான ஒரு தீர்மானத்தை கேரள சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி யது. அதேபோல, வாக்காளர் சரிபார்ப்பு முகாம்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அனைத்தையும் தேர்தல் ஆணையம் புறக்கணித்த விதம், ஆளும் கட்சியின் கட்டளைப் படியும், தங்களுக்கு சாதகமாக வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்யும் ஆளும் கட்சியின் தீய சதித்திட்டத்தின் படியும் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.” இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.