தேர்தல் ஆணவம்! - நவகவி
எஸ்.ஐ.ஆருக்கு அருத்தம் சிறப்பு தீவிரத் திருத்தம் ! தேர்தல் ஆணையம் திருட்டு நாணயம் ரெண்டுமே ஒண்ணுக் கொண்ணு பொருத்தம்! ஓட்டு போடும் ஜனத்துக்கு எதிரா வேட்டு போடும் திருத்தம் -இந்த -திருத்தம். காட்டு தர்பார் மோடியின் திட்டம் கண்ணில் ஆணியா உறுத்தும் - இது -உறுத்தும்! (எஸ்.ஐ.ஆருக்கு) ஞானேஷ் குமார் கூட -அந்த லங்கேஸ் வரன்போல ! சீதாதேவி கடத்தலைப் போல ஓட்டு உரிமை கடத்தலடா -ஜனம் திக்குத் தெரியாத இருட்டிலடா! தேர்தல் ஆணையரே -உமக்கு ஜனங்கள் கேனையரே! வெறும் கோயில் இந்த தேர்தல் கமிஷனுக்கு மோடி தானே மூலவரே!-தேர்தல் படிவம் மூடுமந் திரப்புதிரே! என்னையும் உன்னையும் கழிச்சுக் கட்டிவிட்டு அமித்ஷா மோடி ஞானேஷ்குமார் மூணுபேர் மட்டுமே வாக்காளர் பட்டியலா காட்டினாலும் காட்டுவான் பாரா உஷார்! (எஸ்.ஐ.ஆருக்கு) தேர்தல் பொம்மலாட்டம் - இது ஆர் எஸ் எஸ் பித்தலாட்டம்! - நம்ம குப்பம்மாவுக்கு பதிலா பாருடா கோமாதாவுக்கு ஓட்டு உரிமை கொடுத்தாலும் கொடுக்கிற சங்கிக் கொடுமை! அரவான் களப்பலி போல் -பாரு தேர்தல் களப்பலிகள்! அலுவலர் பலப்பலர் ஆவி பிரிந்தனர் கொலைகார ஒன்றிய கவர்மென்ட்டே! -உனக்கு ஊதப் போகின் றோம்சங்கே! நாட்டில் வாழ உரிமைஇல் லன்னு நம்ம நவாஸ் சாயபுவை ஓரங்கட்ட வரும் இந்தத் திட்டம் கோழி முட்டை தான் ஆனா குஞ்சு பொரிக்காத கூமுட்ட! (எஸ்.ஐ.ஆருக்கு)
