tamilnadu

img

கடல் காக்க ஓர் உலக மாநாடு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

கடல் காக்க ஓர் உலக மாநாடு

கடல் காக்கும் பொறுப்பை இதுவரை தட்டிக்கழித்த உலக சமூகம் சமீபத்தில் பிரான்ஸ் நைஸ் (Nice) நகரில் நடந்த ஐநா கடல் மாநாட்டில் விழித்துக்கொண்டது. தெற்கு பிரான்ஸில் உள்ள இந்த கடற்கரையோர நகரில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள படையெடுத்துவந்தனர்.  “கடல் என்னும் மாபெரும் சக்தியே மனிதகுலத்தை இணைக் கும் ஒரே நம்பிக்கை. நாம் அனைவரும் ஒரே பட கில் பயணம் செய்கிறோம்” என்று  ஆழ்கடலின் மோசமான நிலையை  எடுத்துக்காட்டி அதன் அழிவை  பிரெஞ்சு கடற்பயணி, கடலியலா ளர் மற்றும் முன்னோடி திரைப்படத் தயாரிப்பாளர் ஜாக் கவுஸ்ட்டோ (Jacques Cousteau) எச்சரித்தார். பூமியின் முக்கியப்பகுதி அரை நூற்றாண்டிற்குப் பிறகு டேவிட் அட்டன்பரோ (David Attenborough) ஆழ்கடல் மீன் பிடித்தல் கடல் வளங்களை அழிப்  பது பற்றி ஓசியன் (Ocean) என்ற  தன் இயற்கையியல் திரைப்படத் தில் இதே கருத்தை வலியுறுத்து கிறார். “பூமியில் முக்கியப்பகுதி நிலப்பரப்பில்லை. கடற்பரப்பே”  என்கிறார் அவர். இந்த மறுக்கமுடி யாத கருத்து மிக மோசமான கடல்  ஆரோக்கியத்தால் நிரூபிக்கப்பட் டுள்ளது. ஒரு வார காலம் நடந்த  இந்த மாநாடு ஜூன் 13 2025 அன்று  நிறைவடைந்தது. பூமியின் பரப்பில்  எழுபது சதவிகிதத்திற்கு மேல்  இருக்கும் கடலின் அழிவை பல நாடு களும் இப்போது புரிந்துகொண்டு விழித்துக்கொண்டுள்ளன. 2022 லிஸ்பன் இரண்டாவது ஐநா கடல் மாநாட்டில் பங்கேற்றவர்  களை விட மூன்று மடங்கு அதிக மாக, இந்த மாநாட்டில் 60 உலக  தலைவர்கள், சுமார் 190 அமைச்சர் கள் கலந்துகொண்டனர். பெரும் பாலான நாடுகள் கரைக்கு அப்பால்  இருக்கும் கடலை காக்க உரு வாக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்பு தல் வழங்கியுள்ளன அல்லது விரை வில் வழங்கவுள்ளன என்பது இம்மாநாட்டின் முக்கிய வெற்றி யாகக் கருதப்படுகிறது. இதன்  மூலம் முன்பே உலக கடற்பரப்பில்  30% பரப்பை 2030 இல் பாதுகாக்  கப்பட்ட பகுதியாக அறிவிக்கமுடி யும். உலகக் கடல்களில் மூன்றில்  இரண்டு பகுதியாக இருக்கும் கரைக்கு அப்பால் உள்ள பன்னாட்டு கடற்பகுதியை சட்டப்பூர்வமாக பாதுகாக்கமுடியும். இந்த உடன் படிக்கை ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்குவரும். இருபது ஆண்டுகள் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இது பற்றிய முதல் உடன்படிக்கை 2023  இல் எட்டப்பட்டது. “கடந்த காலத்தில் காண்பதற்குக் கடின மாக இருந்த உற்சாகத்தை இப்  போது காணமுடிகிறது” என்று  ஐநா பொதுச் செயலர் அண்டோ னியோ குட்டரெஸ் (António Guterres) கூறினார். நான்கு புதிய உறுப்பினர்களை சேர்த்து இந்த கூட்டத்தில் 37 நாடு கள் உறுப்பினர்களாக உள்ளன.  “அமெரிக்க அதிபரின் நடவடிக்கை களை எதிர்க்கும் சீனா முக்கிய உலக  நிகழ்வுகளில் பன்னாட்டு அளவில்  ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி வருகிறது” என்று யு எஸ் பசுமை  அமைதி இயக்கத்தின் கடல் பாது காப்பு அமைப்பின் இயக்குனர் ஜான் ஹோஸ்வார் (John Hocevar)  கூறுகிறார். விரைவில் ஆழ்கடல் சுரங்கப் பணிகளை நிறுத்த உதவும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 90 நாடுகளைச் சேர்ந்த அமைச் சர்கள் 2025 பன்னாட்டு பிளாஸ்டிக் கட்டுப்பாட்டு மாநாட்டில் ஒப்பந் தம் ஏற்படவேண்டும் என்று வலி யுறுத்தினர். “இதுவரை கேட்கப் படாத நாடுகளின் குரல்கள் இம்  மாநாட்டில் கேட்குமாறு செய்யப்  பட்டுள்ளது. ஆனால் நிதி ஒதுக்கீட்டு  விஷயத்தில் நாம் இன்னும் வெகு தொலைவு செல்லவேண்டும்” என்று ஏ டி எஃப் (ADF) என்ற பிரான்ஸ் வளர்ச்சி வங்கியின் இயக்குநரும் 2015 பாரிஸ் கால நிலை மாநாட்டின் முன்னாள் நிதி  ஒதுக்கீடு பேச்சாளருமான ரெமிரி யோக்ஸ் (Rémy Rioux) கூறினார். உலகின் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி உலகின் மிகப்பெரிய பாது காக்கப் பட்ட கடற்பகுதியை பிரெ ஞ்சு பாலினீசியாவின் (French Polynesia) அதிபர் மோட்டை பிரதர்சன் (Moetai Brotherson) மாநாட்டின்போது அறிவித்தார். இது 5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. இப்பகுதியில்  ஆழ்கடல் மீன் பிடித்தல் மற்றும்  சுரங்கப் பணிகள் கட்டுப்படுத்தப் படும். சூழல் சுற்றுலா, ஆய்வுப் பணி கள் மட்டும் இங்கு அனுமதிக்கப் படும். “அறிவுரை கூற அல்ல எங்க ளுக்கு உதவ பெரிய நாடுகள் முன்  வரவேண்டும்” என்கிறார் அவர். “பசிபிக் தீவு நாடுகள் ஆழ்கடல்  மீன் பிடித்தலை தடை செய்து விட்டன. இது போல மற்ற நாடு களும் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு  உட்பட்ட கடற்பகுதியில் செய்ய வேண்டும்” என்று வனவட்டு (Vanuatu) வெளியுறவுத் துறை  அமைச்சர் ரால்ப்ரீஜன் வானு  (Ralph Regenvanu) கூறினார். “பிரான்ஸ் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டது. அது இன்னும்  ஆழ்கடல் மீன் பிடித்தலை முழுமை யாக தடை செய்யவில்லை” என்று  ஓசியனா (Oceana) என்ற பன்னாட்டு கடல் அமைப்பின் ஆலோ சகர் அலெக்ஸாண்டரா கவுஸ்ட்டோ (Alexandra Cousteau) கூறு கிறார். கடல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு நாளும் 85 புதிய கடல் பாது காப்பு பகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தேசிய ஜியோ கிராஃபிக் தூய கடல்கள் மற்றும்  இயங்கும் பூமிக்கான (National Geographic Pristine Seas and  Dynamic Planet) அமைப்பின் ஆய்வு கூறுகிறது. மாநாட்டில் உரு வான கடல்களை பாதுகாக்க வேண்டும் என்ற உற்சாகம் நிலை பெறச் செய்யவேண்டும். நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இதுவே  சரியான நேரம் என்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர்.