ஈசன் முருகசாமியின் ‘அரை உண்மை’... விவசாயிகளுக்குச் செய்யும் முழு துரோகம்!
“திமுக அரசுக்கு எதிராகப் பரப்புரை செய்வோம், தேர்தலைப் புறக்கணிப்போம்” என கூவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமியின் 40 நிமிடக் காணொலி, தற்போது ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விவசாயிகளின் நலன் காப்பதாக வேடம் போடும் ஈசன், தனது உரையில் ‘மத்தியில் ஆளும் பாஜகவை இப்போது எதிர்க்கத் தேவையில்லை’ என நழுவுவது, அவரது அரசியல் உள்நோக்கத்தை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளது.
பாஜகவின் ‘பாசக் கயிறு’ தெரியவில்லையா? பாஜக 12 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 5 லட்சம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. பாஜகவின் நவீன தாராளமயக் கொள்கைகள் விவசாயத்தைச் சிதைத்து வரும் நிலையில், “நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” என ஈசன் முருக சாமி கூறுவது, அதுவரை விவ சாயிகளின் தற்கொலைகள் தொடரட்டும் எனச் சொல்வதற்குச் சமம் இல்லையா? நில அபகரிப்பும்... புல்டோசர் அரசியலும் தமிழகத்தில் நில எடுப்பு பற்றிப் பேசும் ஈசன், பாஜக ஆளும் உ.பி., குஜராத், அஸ்ஸாம் மாநி லங்களில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்காகப் பல்லா யிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் புல்டோசர் கொண்டு பறிக்கப்படுவதை ஏன் மறைக் கிறார்? 2013 நில கையகப் படுத்துதல் சட்டத்தையே சிதைத்த பாஜகவை விமர்சிக்க அவருக்கு ஏன் நடுக்கம்? எடப்பாடி ஆட்சியில் சேலம் எட்டுவழிச் சாலைக்காக விவசாயிகளை அச்சுறுத்தியதும், தூத்துக்குடியில் 13 பேரைச் சுட்டுக்கொன்றதும் அவருக்கு மறந்துவிட்டதா? வாக்குறுதி மீறலும்... கிரிமினல் குற்றமும் விவசாய விளைபொருட் களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்வ தாக உறுதியளித்து ஏமாற்றியது மோடி அரசு. சாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த முடியாது என நீதிமன்றத்தில் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்ததும் அதே பாஜக தான். தமிழகத்தில் இலவச மின்சாரத்திற்கு வேட்டு வைக்கும் ‘மின்சாரச் சட்டம் 2025’ மற்றும் பாரம்பரிய விதை உரிமையைப் பறிக்கும் ‘விதைச் சட்டம் 2025’ ஆகியவற்றைத் தீவிரமாக அமல்படுத்தத் துடிக்கும் பாஜகவை எதிர்க்காமல், யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வது, மறைமுகமாக பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவு திரட்டுவது போன்றதுதான். அமெரிக்காவுக்கு அடிபணிந்த மோடி அரசு அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு வரிவிலக்கு அளித்து இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்ததும், அமெரிக்கப் பால் பொருட்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைய அனுமதி அளித்ததும் பாஜக அரசுதான். மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து, விவசாய மானியங்களை வெட்டிச் சுருக்கும் பாஜகவின் அரசியலை விவசாயிகளிடம் விளக்காமல் மௌனம் காப்பது ஏன்? முழுப் பொய்யைவிட அரை உண்மை ஆபத்தானது வரம்புக்குட்பட்ட அதிகாரங் களை வைத்துக் கொண்டு செயல்படும் மாநில அரசு மீது குற்றச்சாட்டு பட்டியலிடும் ஈசன் முருகசாமி, அதிகாரக் குவியலைத் தன்வசம் வைத்துள்ள ஒன்றிய பாஜக அரசின் அக்கிரமங்களை மூடி மறைக்கிறார். தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தும் பாஜகவை எதிர்க்காமல் விவசாயிகளுக்கு விடிவுகாலம் இல்லை. அரை உண்மைகளைப் பேசி விவசாயி களைத் திசைதிருப்பும் ஈசன் முருகசாமியின் இந்த நிலைப்பாடு, உண்மையில் விவசாயிகளுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோக மாகும்! - வே.தூயவன்
