மதுரை, பிப்.2- 2024-2025 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தொழில் வணிகக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டிருந்தும், ஒன்றிய அரசின் பட் ஜெட்டில் இதுகுறித்து எந்த முக்கிய அறிவிப்புகளும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இரத்தினவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த மூன்றாண்டு களில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் இது 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. தனியார் துறை முதலீடு தேக்கம் மற்றும் நுகர்வோர் செலவு குறைப்பு ஆகியவை கவலை அளிக்கிறது.
தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள்
- மார்க்கெட் செஸ் வரி
- சுற்றுச்சூழல் உரிமம் பெறுவதில் சிக்கல்கள்
- உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்ட விதிகள்
- ஜி.எஸ்.டி வரி அமலாக்கத்தில் குழப்பங்கள்
- அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கட்டுப்பாடுகள்
வரவேற்கத்தக்க அம்சங்கள்
- நடுத்தர மக்களுக்கு வருமான வரி விலக்கு
- புதிய வருமான வரிச் சட்டம் விரைவில் அறிமுகம்
- செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க ரூ.500 கோடி முதலீடு
குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த கட்டுப்பாடுகளால் பெரிதும் பாதிக்கப் படுவதாகவும், பல நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ நிர்ப்பந்திக்கப் படுகின்றன என்றும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது. தற்போதைய பொருளாதார தேக்க நிலையில் இருந்து மீள்வதற்கு பொருளாதார ஆய்வறிக்கையின் பரிந் துரைகளை ஒன்றிய பட்ஜெட்டில் செயல்படுத்தாதது ஏமாற்றம் அளிக் கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.