அசாம், திரிபுரா மாநிலங்களில் நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலங்களான
அசாம், திரிபுரா மாநிலங்க ளில் திங்களன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. திரிபுராவின் கோமதி பகுதியில் திங்க ளன்று அதிகாலை 3.33 மணியளவில், 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த மிதமான நிலநடுக்கம் 54 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த ஒரு மணிநேரத்தில் அசாம் மாநிலத்தின் மோரிகான் பகுதியில் அதி காலை 4.17 மணியளவில் (திங்களன்று) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டது. 50 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த ஆபத்துமிக்க நிலநடுக்கத்தால் கட்டி டங்கள் லேசாக குலுங்கியதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. அசாம், திரிபுரா மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்க ளால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உறுதியாக வெளியாகவில்லை. ஆனால் அசாமில் வீடுகள் இடிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அண்டை நாடுகளிலும்.. ஆனால் அசாம் மாநிலத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற் பட்டுள்ளது. இது அபாயகரமானது ஆகும். இந்த நிலநடுக்கம் அசாமின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, அரு ணாச்சலப் பிரதேசம், மேகாலயா, நாகா லாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் மத்திய கிழக்கு பூடான், சீனாவின் சில பகுதிகள் மற்றும் வங்கதேசத்திலும் நில அதிர்வு ஏற் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
