tamilnadu

img

கேரளத்தில் தலையெடுத்த குடிநீர் தட்டுப்பாடு

கேரளத்தில் தலையெடுத்த குடிநீர் தட்டுப்பாடு

“கடவுளின் தேசம்” என அழைக்கப் படும் கேரளம் தண்ணீருக்கு பஞ்சம்  இல்லாத பகுதி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைச்சாரலில் இருப்பதா லும், அதீத மழை கொண்ட பகுதி என்ப தாலும் கேரள மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில், அதாவது 70%  மேற்பட்ட பகுதிகளில் நீரூற்று போல  வாய்க்கால், ஆறு, ஏரி, கிணறுகளில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், பருவமழை தொடங்குவது போல கேரளாவில் முன்கூட்டியே கோடைகாலம் தொடங்கியுள்ளது. தற்போதே மாநி லத்தில் 29 டிகிரி செல்ஸியஸ் அளவு வெயில் கொளுத்தி வருவதால், ஏப்ரல்- மே மாதங்களில் கடுமையான வறட்சியை சந்திக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.  இத்தகைய சூழலில் கேரள அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் கவுன்சில் (KSCSTE) ஆதரவுடன் நடத்தப்பட்ட  ஆய்வின் முடிவில், கேரள மாநிலத்தில் நீர் பற்றாக் குறை தொடர்பாக அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளன.

மலை மற்றும் ஓரளவு பசுமையை கொண்ட காசர்கோடு மாவட்டம் அதிகபட்ச நீர்  பற்றாக்குறையை எதிர்கொண்டு வரு கிறது. அங்கு மாவட்டத்தின் 24.74% பகுதி கடுமையான வறட்சியால்  பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் (22.01%),  கோழிக்கோடு (20.48%) மற்றும் பத்தனம்திட்டா (20.72%) ஆகிய மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக இந்த கணக் கெடுப்பு மாநிலம் முழுவதும் 21,472 உள்ளாட்சி பிரிவுகளில் நடத்தப் பட்டது. அதில் கோடைகாலத்தின் துவக்கத்தி லேயே 2,567 உள்ளாட்சிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. சுதாரிக்குமா தமிழ்நாடு நீர் நிலைக்கு பெயர் பெற்ற கேரளம் கோடைகால துவக்க நிலையிலேயே வறட்சி நிலையை சந்தித்து வரு கிறது. ஆனால் கடுமையான வெயிலை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் முன் கூட்டியே நீர் மேலாண்மை கவனிக்கா மல் அரசு மெத்தனமாக இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் கோடைகாலம் முழுமையாக ஆரம்பிக்கவில்லை. ஒரு  சில இடங்களில் மழை கொட்டி வருவ தால் இன்னும் தமிழ்நாட்டில் வெயில் தெரியவில்லை. வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரு கிறது. அதனால் தற்போதே தமிழ்நாடு அரசு நீர் மேலாண்மைக்கான வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு அமல் படுத்தினால், வறட்சி காலங்களில் பெரியளவில் நீர் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.