திருநெல்வேலி, ஜூன் 23- நெல்லை மாவட்ட அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளதால் வரு கிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சனை ஏற்படாது என அரசு முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்தில் நடை பெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. தமிழக அர சின் முதன்மை செயலாளரும், நெல்லை மாவட்ட கண்காணிப்பாள ருமான ராஜேந்திர குமார் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட ஆட்சி யர் ஷில்பா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு குடி நீர் திட்ட பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வரு வது குறித்தும் ஆய்வு செய்யப்பட் டது. பின்னர் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார், மாவட்ட ஆட்சி யர் ஷில்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரையில் பெரிய அளவில் குடிநீர் பிரச்சனை இல்லை. தென் மாவட்டங் களில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை பெய்து வருவ தால் தேவையான அளவு நீர்இருப்பு உள்ளது. சங்கரன்கோவில், புளி யங்குடி மற்றும் சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வரு கிறது. அந்த கிராமங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. பாபநாசம், சேர்வ லாறு, மணிமுத்தாறு ஆகிய அணை களில் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்க ளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 40 அடியாக வும், மணிமுத்தாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 52 அடியாக வும் உள்ளது. எனவே, நெல்லை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சனை ஏற் படாது. தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
சங்கரன்கோவில் பகுதியில் கோடைமலையாற்றில் இருந்து அணைக்கட்டு அமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு விநி யோகம் செய்யப்பட்டு வந்தது. தற் போது மழை இல்லாததால் அணை வறண்டு விட்டது. அந்த பகுதியில் நிரந்தரமாக குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.543 கோடி செலவில் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனை யை தீர்க்க ரூ.39 கோடியில் 669 பணி கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 528 பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற பணிகள் விரைவில் முடிக்கப் படும். அதேபோல் ரூ.36 கோடி செல வில் அடிபம்பு, ஆழ்துளை கிணறு சரி செய்ய நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. வன்னிக்கோ னேந்தல் பகுதியில் 25 ஆண்டு களுக்கு முன்பு உள்ள மக்கள்தொகை யின் அடிப்படையில் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வந்தது. தற் போது மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற் பட்டு உள்ளது. அதை சரி செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சேரன்மாதேவி, மானூர் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிற்றாறு கால்வாய்களை தனியார் பங்களிப்பு மற்றும் சென்னை அண்ணா பல் கலைக்கழகத்துடன் சேர்ந்து பராம ரிப்பு பணிகள் செய்யப்பட்டு வரு கின்றன. வனப்பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் விலங்குகள் பலியான தாக தகவல் வெளியாகி உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்வோம். அப்படியிருந்தால் வனப்பகுதியில் குட்டைகள் அமைத்து குடிநீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நெல்லை மாவட்டத்தில் நிலத்தடி நீர் சீராக உள்ளது. அணைகளில் 80 அடிக்கு மேல் தண்ணீர் வரும் போது, விவசாய தேவைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தாமிர பரணி ஆறு, நம்பியாறு, கருமேனி யாறு இணைப்பு திட்டத்தில் 3-வது கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நெல்லை மாவட்ட தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படவில்லை.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராம லிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி ஆணையா ளர் விஜயலட்சுமி, நகராட்சிகளில் மண்டல இயக்குனர் காளிமுத்து, நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாராணவரோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.