tamilnadu

கண்ணீரில் மிதக்கும் கனவுகள்

ழந்துள்ளனர். குடும்பங்கள் சிதைந்துள் ளன. குழந்தை கள் ஆதரவற்று  போயுள்ளனர். 

இயற்கை சீற்றங்களிலும் இரக்கமற்ற வசூல் 
வெள்ளம், புயல், வறட்சி என இயற்கை பேரிடர்களின் போதும் கடன்  தவணை வசூல் நிற்பதில்லை. வேலையும் இல்லாமல், வருமானமும் இல்லாமல் தவிக்கும் பெண்கள், தங்கள் சிறு சேமிப்பையும் இழந்து நிற்கிறார்கள். 

அவசர தேவைக்கு அடிமைப்படுத்தும் அமைப்பு 

ஆய்வில் கலந்துகொண்ட 50 பெண்களில்:
-    99% பேர் குடும்பத்தின் தலையாய பொறுப்பில் உள்ளவர்கள்
-    பெரும்பாலானோர் கூலி வேலை, வீட்டு வேலை செய்பவர்கள்
-    எவரிடமும் நிலம், நகை, சொத்து இல்லை
-    60% பேர் வாடகை வீட்டில் வாழ்பவர்கள்
 உடனடி நடவடிக்கைக்கான கோரிக்கைகள் 

மாதர் சங்கம் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கைகள்:
1.நுண்கடன் நிறுவனங்களை கட்டுப்படுத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்
2.இயற்கை பேரிடர் காலங்களில் கடன் தவணைக்கு விலக்கு அளிக்க வேண்டும்
3.அரசு வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டும்
4.பெண்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் சந்தை வாய்ப்பு உருவாக்க வேண்டும்


நம்பிக்கைக்கான விடியல்

“நாங்கள் கடனை கட்ட மறுக்க வில்லை. ஆனால் எங்களுக்கும் வாழ வழி வேண்டும்...” - இந்த எளிய கோரிக்கை நியாயமானது அல்லவா? டெல்டா மண்டல மாநாட்டில் 

எழுந்த குரல்கள் 

“மனுவாத சித்தாந்தத்தை முறி யடித்து சமூகச் சீர்திருத்த பாரம்பரி யத்தை முன்னெடுப்போம்” - என்ற முழக்கத்துடன் பிப். 1 சனிக்கிழமை மாலை தஞ்சையில் கூடினர் நூற்றுக் கணக்கான பெண்கள். தமிழ்நாடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் டெல்டா மண்டல மாநாடு இந்த  அவலங்களை வெளிச்சமிட்டுக் காட்டியது. 

மாதர் சங்க மாநில செயலாளர் எஸ். தமிழ்ச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் டி.லதா, வி.மேரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், திருச்சி, தஞ்சை, திரு வாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து பெண்கள் திரண்டு வந்தனர். 

திசை மாறிய சுயஉதவிக்குழுக்கள்

“இந்த நெருக்கடி தனிப்பட்ட பெண்களின் பிரச்சனை அல்ல, இது முத லாளித்துவ சமூக அமைப்பின் பிரச்ச னை” என்று மாநாட்டில் வலியுறுத்தினார் மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா. ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி மாநாட்டில் உரை யாற்றும்போது, “நுண்கடன் நிறு வனங்களின் கொடுமைகள் பெண்களின் வாழ்வையே சீரழிக்கிறது. சுய உதவிக் குழுக்களின் அடிப்படை நோக்கமே மாறிவிட்டது. பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காக துவங்கப் ப்பட்ட அமைப்புகள், இன்று அவர்களை  கடன் சுமையில் அழுத்துகின்றன.”  “1986-87 காலகட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக துவங்கப்பட்ட சுய உதவிக் குழுக்கள், அரசு வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் இன்று தனியார் நுண்கடன் நிறு வனங்கள் இதை வியாபாரமாக்கிவிட்டன. வறிய பெண்களின் தேவையை சுரண் டலுக்கான ஆயுதமாக மாற்றியுள்ளன,” என்று வேதனையுடன் சுட்டிக்காட்டினார் வாசுகி.  “கிராமப்புற ஏழை மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்காக துவங்கப்பட்ட திட்டம், இன்று 25% வட்டி வசூலிக்கும் கொள்ளை முதலாளித்துவமாக மாறியுள்ளது. இயற்கைப் பேரிடர் காலங்களில் கூட இரக்கமின்றி வசூல் செய்யும் இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த சிறப்புச் சட்டம் தேவை,” என்று வலியுறுத்தினார்.  “பெண்கள் தங்கள் வாழ்வாதாரத் திற்காக கடன் வாங்குகிறார்கள். ஆனால் அந்த கடன் அவர்களது வாழ்க்கை யையே பறிக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து போராட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உட னடியாக தலையிட்டு, பெண்களின் பொருளாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டும்,” என்று உணர்ச்சிகரமாக பேசினார் வாசுகி.  எம்.சின்னதுரை எம்எல்ஏ உறுதி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை ஆகியோரும் மாநாட்டை வாழ்த்தி, இந்த பிரச்சனை யை சட்டமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.  மாதர் சங்க மாவட்ட செயலாளர் கள் கடலூர் மாதவி, திருவாரூர் கோமதி, புதுகை சுசீலா, மயிலாடுதுறை வெண்ணிலா, திருச்சி மாநகரம் சரஸ்வதி, புறநகர் கோமதி, அரியலூர் அம்பிகா, பெரம்பலூர் மகேஸ்வரி, பாண்டிச்சேரி பவானி மற்றும் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் தங்கள் பகுதிகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை விரிவாக எடுத்துரைத்தனர்.  பெண்களின் முன்னேற்றத்திற்காக துவங்கப்பட்ட நுண்கடன் திட்டம், இன்று அவர்களை கடன் அடிமைகளாக மாற்றியுள்ளது. வறுமையில் வாடும் பெண்களின் கண்ணீரை துடைக்க அரசு  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.  “நாளை விடியும்...” என்ற நம்பிக்கை யில் காத்திருக்கிறார்கள் லட்சக்கணக் கான பெண்கள். அந்த நம்பிக்கையை நிஜ மாக்குவது நம் கடமை. மாநாட்டின் நிறைவில் தஞ்சை மாவட்ட செயலாளர் இ.வசந்தி நன்றி கூறினார்.