மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசலாம்
சென்னை,ஜூலை 22- மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீசலாம் என்பதால் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள், 2 நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங் களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி வருமாறு:- தென்மேற்கு பருவமழை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக தமிழகம், புதுச்சேரியில் பல இடங் களில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தைப் பொருத்த வரை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல், குமரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் காற்று வீச லாம். எனவே, தமிழகம், புதுவை மீன வர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.