முதல்வர் மு.க.ஸ்டாலின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை, வி.சி.எஸ் நகர் பகுதியில், திமுக சார்பில் தூய்மைக் காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதனன்று வழங்கப்பட்டன. இதில் திமுக வட்டச் செயலாளர்கள் சோமசுந்தரம், அருள்குமார், மாமன்ற உறுப்பினர் சித்ரா, மாவட்ட நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
