tamilnadu

img

மணிப்பூர் சம்பவத்தின் போது அமைதியாக இருந்தது ஏன்?

சென்னை, டிச.28-  மணிப்பூர் கலவரம் சம்பவத்தின் போது அமைதியாக இருந்தது ஏன்? என்று பாஜக அண்ணாமலைக்கு திவ்யா சத்யராஜ்  கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்படக் கலைஞர் சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார். ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தின் மூலம், கடந்த 4  வருடங்களாக தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச் சத்து நிறைந்த உணவு வழங்கி வருகிறார். தொண்டு நிறுவனங்களு டன் இணைந்து பணியாற்றும் இவர், தமிழ்நாட்டைத் தாண்டி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களிலும் ஊட்  டச்சத்து குறை பாடு உள்ள மக்க ளுக்கு உதவி செய்து வரு கிறார்.  சமூக அக்கறையுடன் பல்வேறு செயல்களில்  ஈடுபட்டுவரும் இவர், தனது எக்ஸ்  சமூக வலைதளத்தில்  தமிழக பாஜக தலைவருக்கு சில கேள்வி களை எழுப்பியுள்ளார். அதில் “மணிப்பூர் பிரச்சனையின் போது  ஏன் அமைதியாக இருந்தீர்கள். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நெரிசலான இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்திய போது சில தலைவர்கள் ரத யாத்திரை செல்ல ஏன் முயற்சித்தார்கள். கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட போது வீடுகளில் விளக்கேற்றச் சொல்லி ஏன் கேட்டது. தடுப்பூசி கொள்கை பேரழிவை ஏன் ஏற்படுத்தியது.தென்னிந்தியாவில் உள்ளவர்களும் விவசாயிகள் தான், அவர்களை ஏன்  புறக்கணிக்க வேண்டும்.ஒரு மதம் எப்போதும் ஏன் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.தென்னிந்தியாவில் உள்ள மாணவர்களும் மனிதர்கள் தான். அவர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும். குஜராத்தில் என்ன நடந்தது என்பதற்கு பதில் இல்லை” என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.