அறந்தாங்கி, டிச.28- ஆந்திராவில் வழங்குவது போல் மாற்றுத்திறனாளிகளுக்கான உத வித்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் ஜனவரி 21 ஆம் தேதி ஒன்றிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மாநிலத் தலைவர் டி.வில்சன் தலைமையில் நடைபெற்றது. சங்க அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், மாநிலப் பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி, மாநிலப் பொருளாளர் கே.ஆர்.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஆந்திராவில் வழங்குவது போல் தமிழக அரசும் மாற்றுத்திறனாளி களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும், 100 நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்குவதோடு, அவர்களுக்கு 4 மணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 2025 ஜனவரி 21 அன்று தமிழகம் முழுவதும் ஒன்றிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்து வது என்றும் ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான உத வித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளை அலைக்கழிக்காமல் ஒரே அடையாள அட்டையான தனித்துவ அடையாள அட்டை (யூடிஜடி) வழங்க வேண்டும், அனைத்து மாற்றுத் திறனாளிகள் குடும்ப அட்டைகளையும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் குடும்ப அட்டைகளாக மாற்றி அவர்களுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 10 அன்று தில்லியில் ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை சார்பில் நடைபெறக்கூடிய தர்ணா போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.