ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண் தஞ்சாவூர்,
மார்ச் 19 - தஞ்சாவூர் அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டவர் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நீதி மன்றத்தில் சரணடைந்தார். தஞ்சாவூர் அருகே ஏழுப்பட்டியைச் சேர்ந்தவர் குருந்தையன் (50). இவர் மீது இரண்டு கொலை வழக்கு கள் இருந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி அதே பகுதியில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வல்லம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஏழுப்பட்டியைச் சேர்ந்த ஒத்தக்கை ராஜா உள்ளிட்ட 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட கடலூரைச் சேர்ந்த கலைவாணன் (38) என்பவர் செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் முதலாம் எண் நீதிமன்ற நடுவர் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை யடுத்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்த னர்'.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்த பக்தர் திடீரென உயிரிழப்பு தஞ்சாவூர்,
மார்ச் 19 - தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராள மானோர் சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். இந்நிலை யில் செவ்வாய்க்கிழமை மாலை கோபிச் செட்டிப்பா ளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (68) என்பவர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் கழிவறைக்கு சென்று வந்தவர், கேரளாந்தன் நுழைவு வாயில் அருகே வந்தபோது, திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் அளித்தனர். அவரை உறவினர்கள் ஆம்புலன்ஸில் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து சுந்தர மூர்த்தியின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊருக்கு வேறு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு மறியல் தஞ்சாவூர், மார்ச் 19 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் விளங்குளம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி புனிதா (35). இவர்களுக்கு கனிஷ்கா (14), அனுஷ்கா(12), ஹர்ஷிகா (8) என்ற 3 பெண் குழந்தை கள் உள்ளனர். ரமேஷ் புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே இடையாத்திமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் 15 அன்று இரவு சுமார் 9 மணியளவில் ரமேஷ் பணி முடிந்து கிழக்கு கடற்கரை சாலையில், விளங்குளம் திரும்பிக் கொண்டிருந் தார். அப்போது, செந்தலைப்பட்டினத்தில் இருசக்கர வாக னத்தில் எதிரே வந்த அசாருதீன் என்பவரது மோட்டார் சைக்கிளில் நேருக்கு நேர் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். ரமேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரி ழந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறை யினர் வழக்குப் பதிந்தனர். அவரது உடல் கூராய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூரிலிருந்து விளங்குளம் கொண்டு வரும் வழியில், செவ்வாய்க் கிழமை மாலை சேதுபாவாசத்திரம் கடைவீதியில், அவரது உறவினர்கள் ரமேஷின் உடலை கொண்டு வந்த ஆம்பு லன்ஸ் வாகனத்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறி முதல் செய்ய வேண்டும். ரமேசின் மனைவி, மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், அதிராம்பட்டி னம் காவல் ஆய்வாளர் முருகேசன், பேராவூரணி உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் மற்றும் சேதுபாவா சத்திரம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்திற்கு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.