tamilnadu

img

பேராவூரணி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் துவக்கி வைப்பு

பேராவூரணி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் துவக்கி வைப்பு

தஞ்சாவூர், செப். 28-   தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புக்கரம்பை பெரியகுளம் தார்ச்சாலை அமைக்கும் பணி ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டிலும், அழகியநாயகிபுரம் பொது விநியோகத்திட்ட கட்டிடம் ரூ.13 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டிலும், இரண்டாம் புளிக்காடு ஊராட்சி வேளாகுடி பயணியர் நிழற்குடை ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், மருங்கப்பள்ளம் ஊராட்சி சாந்தாம்பேட்டை அங்காடி கட்டிடம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் என ரூபாய் 1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் துவக்கியும் வைத்தனர்.