tamilnadu

img

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தீபாவளி தொடர் விடுமுறையொட்டி சென்னை மற்றும் பிற ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தீபாவளியை பண்டிகையை ஒட்டி அக்.16 - 19 வரை 4 நாட்களுக்கு சென்னையில் இருந்து 14,268 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
பிற ஊர்களில் இருந்து 6,110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி முடிந்து சென்னை உள்ளிட்ட ஊர்களுக்குத் திரும்ப அக்டோபர்  21-23 வரை 15,129 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.