உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் தாக்க முயன்ற சம்பவதிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்-ஐ தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்; ஜனநாயகத்தின் மிக உயரியதான நீதித்துறை மீதான இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.
இந்த தாக்குதல் முயற்சிக்கு தலைமை நீதிபதி அமைதியாகவும், பெருந்தன்மையுடனும் பதிலளித்தது நீதித் துறையின் பலத்தை காட்டுகிறது; ஆனாலும், இந்த சம்பவத்தை நாம் எளிதாக கடந்து செல்ல முடியாது.
தாக்குதல் நடத்தியவர் சொன்ன காரணம், சமூகத்தின் அடக்குமுறை மற்றும் படிநிலை மனநிலை எவ்வளவு ஆழமாக இன்றளவும் நீடிக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஒரு சமூகமாக, நமது மக்களாட்சி நிறுவனங்களை மதித்து, அதனை பாதுகாக்கும் பண்பை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்; நமது நடத்தையில் முதிர்ச்சியையும் வெளிப்படுத்த வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.