மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு ஜிதேந்திர சவுத்ரி துவக்கி வைத்தார்
பழனி, அக். 6 - தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (அக். 5) அன்று பழனியில் துவங்கியது. முதல் நாளில், பழங்குடி மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பண்பாட்டுப் பேரணியும், அதன் நிறைவாக பொதுக்கூட்டமும் நடைபெற்றது. தியாகிகள் நினைவு கொடி - ஜோதி அதைத்தொடர்ந்து, திங்கட் கிழமையன்று பொது மாநாடு மற்றும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு மாநாட்டிற்கு தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ஆர். தமிழரசன் மாநாட்டுக் கொடியை எடுத்துக்கொடுக்க, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பெற்றுக் கொண்டார். மூத்த தோழர் ஆர்.ஏ. லட்சுமணராஜா நினைவு ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் எல். ஜெயராமன் எடுத்துக் கொடுக்க ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணைத்தலைவர் பிருந்தா காரத் பெற்றுக்கொண்டார். இதேபோல் எஸ்.சி. பாலையா நினைவு ஜோதியை எஸ்.கே. மாணிக்கம் எடுத்துக் கொடுக்க சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பால பாரதியும், தியாகி எம். சின்னமுத்து நினைவு ஜோதியை எஸ். தங்கராஜ் எடுத்துக்கொடுக்க விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் டி. ரவீந்திரனும், ஏ.எம். காதர் நினைவு ஜோதியை மாநிலக்குழு உறுப்பினர் பி. சடையப்பன் எடுத்துக் கொடுக்க விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கமும், பாஷா கான் நினைவு ஜோதியை வி. அண்ணாமலை எடுத்துக் கொடுக்க விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி. பெருமாளும், கலைமணி, செல்வராணி நினைவு ஜோதியை பி. காளியப்பன் எடுத்துக்கொடுக்க விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் பி. பெருமாளும் பெற்றுக் கொண்டனர். மாநாட்டுக் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் என். கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். ஜிதேந்திர சவுத்ரி பிரதிநிதிகள் மாநாட்டில், மாநிலத் துணைத்தலைவர் ஏ.வி. சண்முகம் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. வரவேற்புரையாற்றினார். மாநாட்டைத் துவக்கி வைத்து, ஆதிவாசி உரிமைகளுக்கான தேசியமேடை யின் அகில இந்திய தலைவர் ஜிதேந்திர சவுத்ரி உரை யாற்றினார். பொதுச்செயலாளர் இரா. சரவணன், பொரு ளாளர் ஆ. பொன்னுச்சாமி ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்துப் பேசினர். மாநாட்டை வாழ்த்தி சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செய லாளர் சாமி. நடராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். செவ்வாய்க்கிழமையன்றும் மாநாடு நடைபெறுகிறது.