நவ. 6, 11 - பீகாரில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு
புதுதில்லி, அக். 6 - பீகார் சட்டப் பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணை யர்கள் டாக்டர் சுக்பீர் சிங், டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில், 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத்தில், 122 தொகுதி களுக்கு நவம்பர் 11 ஆம் தேதியும் தேர்தல் நடை பெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். முழுமையாக வீடியோ பதிவு 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப் பேரவை தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படை யாகவும் நடத்தி முடிக்கப்படும் என்ற தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுமை யாக வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறி னார். 7.43 கோடி வாக்காளர்கள் பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 2 எஸ்.டி., 38 எஸ்.சி., பிரிவின ருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும். ஆண்கள் 3.92 கோடி, பெண்கள் 3.50 கோடி, மாற்றுப் பாலினத்தவர்கள் 1,725 பேர் என மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.