கரூர், ஜூன் 12- கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், இடையபட்டியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் (எண் 5044) விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் ரங்கசாமி. இவர் கடையில் பணி செய்து வரும் போது சமூக விரோதிகள் தாக்கி னர். அவர்கள் மீது வழக்கு ப்பதிவு செய்த காவல்துறை, அவர்களை இன்னும் கைது செய்யவில்லை. இதனை கண்டித்தும், உட னடியாக குற்றவாளிகளை கைது செய்திட வேண்டும், பாதிப்புக்குள்ளான ரெங்க சாமியின் குடும்பத்தினரின் உயிருக்கும், உடமைக ளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்து கரூர் மாவட்ட டாஸ்மாக் அனை த்து தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுப்பட்டனர். கரூர் பேருந்து நிலையம் ரவுண்டான அரசு டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட கட்டுமான சங்க மாவட்ட துணைத் தலைவர் ப.சரவணன் கோரிக்கை இயக்கத்தை தொடங்கி வைத்து பேசி னார். எல்.பி.எப் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணன், சு.ஆசைத்தம்பி, வி.முருகேசன், ஆர்.மாய வன், சிஐடியு சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.பத்மஸ்ரீ காந்தன், கே.பிச்சைமுத்து, பி.சுரேஷ்குமார், அரசு பணியாளர்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ராம லிங்கம், வெங்கடேசன், கண்ணன், அங்கப்பன், வைர பெருமாள், நாகராஜன், எஸ்.சி. எஸ்.டி சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் க.மகா முனி, ரவிச்சந்திரன், கண் ணப்பன், இளங்கோவன், வெற்றிவேல், தமிழ்நாடு விற்பனையா ளர் மற்றும் உதவி விற்பனை யாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிவக்குமார், சுரேஷ், கருப்புசாமி, மோகன், ரெங்கசாமி, ஏழு மலை, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர், உதவி விற்பனையாளர் மற்றும் பணி யாளர் முன்னேற்ற சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள், ராஜா, மணிமாறன், பெரிய தம்பி, மாயவன், குணசேக ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.