tamilnadu

img

சிலிண்டர் வெடித்து வீடு சேதம்

சிலிண்டர் வெடித்து வீடு சேதம்

ஈரோடு, ஜன.25- பவானி அருகே பூட்டியிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் உடைமைகள் தீயில் எரிந்து சேதமாகின. ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த வாய்க் கால்பாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் பானு மதி (38). தனியார் பால் பண்ணையில் பணியாற்றி வரும் இவர், தனது குடிசை வீட்டைப் பூட்டிவிட்டு அரு கிலுள்ள ஆதிபராசக்தி கோவிலுக்கு வெள்ளியன்று சென்றுள்ளார். அப்போது, பூட்டிய வீட்டுக்குள் இருந்த  சிலிண்டர் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டுக்குள் வைக்கப் பட்டிருந்த டிவி, பீரோ உட்பட அனைத்து உடைமைக ளும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்திற்கு வந்த  பவானி தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.