tamilnadu

img

காட்டுப்பன்றிகளால் அச்சம்: போராட்ட அறிவிப்பு

காட்டுப்பன்றிகளால் அச்சம்: போராட்ட அறிவிப்பு

கோவை, ஜன.25- வடவள்ளி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த தவ றிய வனத்துறையை கண்டித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சி, 41 ஆவது வார்டுக்குட்பட்ட வடவள்ளி, மருத மலை அடிவாரப்பகுதியில் கடந்த சில  வாரங்களாக காட்டுப்பன்றிகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக சாலைகளில் உலா வரும்  பன்றிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை யும் நடைப்பயிற்சி மேற்கொள்ப வர்களையும் தாக்கி வருகின்றன. மக்க ளின் தொடர் புகார்களை அடுத்து வனத் துறையினர் ஆங்காங்கே கூண்டுகள் அமைத்தாலும், பன்றிகள் அதில் சிக்கா மல் போக்குக் காட்டி வருகின்றன. இந்நி லையில், ஞாயிறன்று காலை மும்ம நாயக்கர் வீதியில் குட்டிகளுடன் பன்றி கள் ஓடிவரும் செல்போன் காட்சிகள் வெளியாகி வைரலாகி உள்ளது. வனத் துறையின் மெத்தனப்போக்கால் உயிரி ழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக குற் றஞ்சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், உரிய நடவடிக்கை எடுக்காத வனத் துறையை கண்டித்து போராடத்தில் ஈடு படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.