tamilnadu

img

சேற்றில் சிக்கிய பெண் யானை மீட்பு

சேற்றில் சிக்கிய பெண் யானை மீட்பு

கோவை, ஜன.25- பேரூர் அருகே விவசாயத் தோட்டத்தின் சேற்றுக் குழியில் சிக்கி உயிருக்குப் போராடிய வயதான பெண்  யானையை, வனத்துறையினர் பல மணி நேரம் போராடி மீட்டனர். கோவை மாவட்டம், பேரூரை அடுத்த கரடி மடை, குப்பனூர் மற்றும் தீத்திபாளையம் ஆகிய பகுதி களில் கடந்த 10 நாட்களாக வயதான பெண் யானை ஒன்று உலா வந்தது. அவ்வப்போது பயிர்களை சேதப் படுத்தியும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை  துரத்தியும் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்த னர். இந்நிலையில், சனியன்று மாலை வனப்பகுதியி லிருந்து வெளியேறிய இந்த யானை, குப்பனூர் பகுதி யில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் நுழைந் தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள குப்பை மற்றும் சேறு நிறைந்த குழியில் விழுந்து சிக் கிக்கொண்டது. சேற்றிலிருந்து வெளியேற முடியா மல் யானை பிளிறிய சத்தம் கேட்டு அங்கு விவசாயி கள் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர் அருண் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, ஞாயிறன்று காலை ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ராட்சத கயிறுகள் மூலம் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக யானை மீட்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சேற்றில் சிக்கிக் கிடந்த தால் யானை மிகவும் சோர்வுடன் காணப்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான குழுவினர் யானைக்கு முதலுதவி  சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். யானையின் உடல்நிலை சீரானவுடன், வனப்பகுதிக்குள் விடுவ தற்கு வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.