வேலைக்காக வாழ்க்கையா? வாழ்க்கைக்காக வேலையா?
“நாங்கள் கேட்பது சலுகை அல்ல; சமத்துவம். நாங்கள் கேட்பது ஓய்வு அல்ல; மீண்டும் புத்துணர்வோடு பணி யாற்ற ஒரு சிறு இடைவெளி.” என்கிற ஆவேச முழக்கத்தோடு வங்கி ஊழி யர்கள் இந்த வேலை நிறுத்த போராட் டத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். நவீன இந்தியாவின் பொருளாதார சக்கரத்தை சுழற்றும் அச்சாணிகள் வங்கிகள். ஆனால், அந்தச் சக்க ரத்தை தங்கள் உழைப்பால் நகர்த்தும் ஊழியர்களின் வாழ்க்கை இன்று தேய்ந்து போய், அடிப்படை உரிமைக் காக வீதியில் இறங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 27, 2026 அன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்பது வெறும் ஊதிய உயர்வுக்கானது அல்ல; அது தொலைந்து போன “நிம்மதியான வாழ்க்கைக்கான” அறப்போர்! பத்தாண்டுகால மௌனம்: நீதிக்கான நெடிய பயணம் கடந்த 2015-ம் ஆண்டே “ஐந்து நாள் வேலை” என்பது கொள்கை ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டது. “இரண்டா வது மற்றும் நான்காவது சனிக்கிழமை கள் விடுமுறை; விரைவில் மற்ற சனிக்கிழமைகளும் விடுமுறையாக்கப் படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இன்று பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 11-வது, 12-வது ஊதிய ஒப் பந்தங்கள் வந்துவிட்டன, ஆனால் ஊழி யர்களின் இந்த நியாயமான கோரிக்கை மட்டும் அதிகார வர்க்கத்தின் கோப்பு களில் இன்னும் உறங்கிக் கொண்டி ருக்கிறது. நவீன காலத்து ‘இயந்திரங்களா’ ஊழியர்கள்? இன்று ஒரு வங்கி ஊழியர் என்ப வர் வெறும் கணக்கு எழுதுபவர் மட்டு மல்ல. அவர்: அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அடிமட்ட முகவர். டிஜிட்டல் இந்தியா கனவை நனவாக் கும் முன்வரிசை போர்வீரன். கடன் வசூல் செய்யும் அதிகாரி மற்றும் காப்பீட்டுத் திட்டங்களை விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இத்தனை சுமை களையும் சுமக்கப் போதிய ஆட்கள் இல்லை. ஓய்வுபெறுபவர்களின் இடங் கள் நிரப்பப்படுவதில்லை. இதன் விளைவு? எல்லை கடந்த மன அழுத் தம், சிதைந்து வரும் குடும்ப உறவு கள் மற்றும் கேள்விக்குறியாகும் உடல் நலம். ஒரு இயந்திரத்தை போல ஓயாமல் உழைக்க ஊழியர்கள் என்ன சதைப்பிண்டமான ரோபோக்களா? இந்த பாரபட்சம் ஏன்? – ஊழியர்களின் குமுறல் “ரிசர்வ் வங்கி (RBI) ஊழியர்க ளுக்கு ஐந்து நாள் வேலை, எல்.ஐ.சி (LIC) ஊழியர்களுக்கு ஐந்து நாள் வேலை, ஒன்றிய அரசு மற்றும் கார்ப் பரேட் நிறுவனங்களுக்கு ஐந்து நாள் வேலை... ஆனால், நாட்டின் கடைக் கோடி கிராமம் வரை அரசின் திட்டங் களை கொண்டு செல்லும் வங்கி ஊழி யர்களுக்கு மட்டும் ஏன் இந்த பார பட்சம்?” 2023 இல் இந்திய வங்கிகள் சங்கம் (IBA) பரிந்துரைத்த பிறகும், ஒன்றிய அரசு “பங்குதாரர்கள் எதிர்ப்பு” என்ற காரணத்தைக் கூறி இதனை தட்டிக் கழிப்பது, ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டும் மனிதாபிமானமற்ற செய லாகவே பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் மேலாதிக்கமா? தொழிலாளர் உரிமையா? இந்த அலட்சியப் போக்கு என்பது தற்செயலானது அல்ல. இது நவீன தாராளமயக் கொள்கைகளின் ஒரு பகுதி. தொழிற்சங்க உரிமைகளை நசுக்கி, ஊழியர்களை தங்களின் விருப்பப்படி கசக்கிப் பிழியத் துடிக் கும் கார்ப்பரேட் சக்திகளுக்கு அரசு அடி பணிகிறதோ என்ற சந்தேகம் எழுகி றது. லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு, உழைப்பவனின் உணர்வு களை மிதிப்பது எந்த விதத்தில் நியா யம்? போராட்டமே தீர்வு! உரிமைகள் ஒருபோதும் தட்டில் வைத்து வழங்கப்படுவதில்லை; அவை போராட்டங்களால் மட்டுமே வென்றெ டுக்கப்படுகின்றன என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. 2026-ன் தொடக்கமே போராட்டமாக மாறியிருப்பது ஊழியர்களின் பொறு மையின் எல்லையை உணர்த்துகிறது. கார்ப்பரேட் ஊடகங்களின் திசை திருப்பல்களை புறந்தள்ளி, ஜனவரி 27 அன்று வங்கி ஊழியர்கள் மேற் கொள்ளும் இந்த அறப்போர் வெற்றி பெற வேண்டும். இது அவர்களின் கௌரவப் போர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போர்! ஆர்.மகேஸ்வரன், கோவை மாவட்டச் செயலாளர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்
