tamilnadu

img

ஏஐடியுசி கட்டுமான சங்க தேசிய பொதுக்குழு கூட்டம்

ஏஐடியுசி கட்டுமான சங்க தேசிய பொதுக்குழு கூட்டம்

கோவை, ஜன.25- ஏஐடியுசி கட்டுமானத் தொழிலாளர் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுக் குழு கூட்டம் கோவையில் துவங்கி யது. ஏஐடியுசி அகில இந்திய கட்டட கட்டுமானத் தொழிலாளர் மகா சம்மே ளனத்தின் தேசிய பொதுக்குழு கூட்டம் கோவை, சித்தாபுதூரில் ஜன.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று காலை காந்திபுரம் ஜீவா மன்றம் அருகிலிருந்து பிரமண்ட பேரணி நடை பெற்றது. பேரணியை தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சு. பழனிசாமி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற திறந்த வெளி கருத்தரங்கில், பெரும் போராட் டங்களுக்கு பிறகு 1996 இல் கொண்டு வரப்பட்ட கட்டுமானத் தொழிலாளர் நலச் சட்டத்தை, கடந்தாண்டு ஒன்றிய  அரசு தன்னிச்சையாக கலைத்துள்ளது. இதனுடன் 44 தொழிலாளர் நலச் சட்டங் களும் கைவிடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை 60 கோடி தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவாலாகும். கைவிடப்பட்ட  44 சட்டங்களையும் மீண்டும் அமல்ப டுத்த வலியுறுத்தி, மத்திய தொழிற் சங்கங்கள், விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ள போராட்டங்களுக்கு சம் மேளனம் ஆதரவு தெரிவிக்கிறது. அதன டிப்படையில், பிப்.12 ஆம் தேதியன்று நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது  வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் அனைத்து கட்டுமா னத் தொழிலாளர்களும் குடும்பத்தோடு  பங்கேற்பது என கருத்தரங்கில் முடி வெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏஐடியுசி தேசிய செய லாளர் வகிதா நிஜாம், கட்டுமானத் தொழிலாளர் மகா சம்மேளன தேசிய  பொதுச்செயலாளர் விஜயன் குனிசேரி, ஏஐடியூசி மாநிலத் தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன், பொதுச்செயலாளர் எம்.இராதாகிருஷ்ணன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம், சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.சின்னசாமி, என்.சேகர், ஆர். தில்லைவனம், மாவட்ட பொதுச்செய லாளர் சி.தங்கவேல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். முன்னதாக, மாநிலத்துணைத் தலைவர் ஆர்.பால கிருஷ்ணன் வரவேற்க, மாவட்டத் தலை வர் ஆர்.நாராயணன் நன்றி கூறினார்.