games

img

விளையாட்டு வானில் ஒளிரும் வெற்றி வீராங்கனைகள்

விளையாட்டு வானில் ஒளிரும் வெற்றி வீராங்கனைகள்

பசுமைப் புல்வெளிகளும், ஓடு பாதைகளும் ஒரு காலத்தில் பெண்களுக்குத் தடைசெய்யப்பட்ட களங்களாக இருந்தன. விளையாட்டு களில் பெண்கள் சிறந்து விளங்க இய லாது என்ற கருத்து நிலவிய காலகட்டத் தில், அத்தகைய சங்கிலிகளை உடைத்து வரலாற்றை  எழுதிய வீராங்கனைகளின் பயணம் மகத்தானது. இன்று வரை, அவர்களது வெற்றிப் பயணம் அபாரமானது. மகாராணிகள் டென்னிஸ் விளையாட்டு பெண்களு க்குத் தனித்துவமான தளத்தை வழங்கி யுள்ளது. 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற செரீனா வில்லி யம்ஸ், நவீன டென்னிஸின் பெருமைக்கு இணையானவர். தன் சகோதரி வீனஸ்  வில்லியம்ஸுடன் சேர்ந்து, ஆப்பிரிக்க -அமெரிக்கப் பின்னணியில் இருந்து வந்த இந்தச் சகோதரிகள் இனவெறியை யும் சமூகப் பாகுபாடுகளையும் எதிர் கொண்டு, தங்கள் திறமையால் உலகையே மவுனமாக்கினர். ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டெபி  கிராப், 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை யும் ஒலிம்பிக் தங்கத்தையும் ஒரே ஆண்டில் வென்று “கோல்டன் ஸ்லாம்” என்ற அரிய சாதனையைப் படைத்த வர். அதே போன்று மார்டினா நவ்ரதி லோவா, கிறிஸ் எவர்ட் ஆகியோர் டென் னிஸ் விளையாட்டுக்கே புதிய இலக்கணம் வகுத்தனர். மார்கரெட் கோர்ட் 24 கிரா ண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களுடன் இன்றும் முதலிடத்தில் நிற்கிறார். பெண் களின் சம உரிமைக்காகப் போராடிய பில்லி ஜீன் கிங், டென்னிஸ் மட்டுமின்றி சமூக மாற்றத்திற்கும் வழிகாட்டியாக விளங்கினார். இளம் தலைமுறையில் நவோமி ஒசாகா, 20 வயதிலேயே செரீனாவைத் தோற்கடித்து அதிர்ச்சிக்குள்ளாக்கி னார். மனநலம் குறித்து வெளிப்படை யாகப் பேசும் இவரது தைரியம், விளை யாட்டு வீரர்களின் உளவியல் நலனுக் கான விழிப்புணர்வை உலகளவில் ஏற்படுத்தியது. விண்மீன்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் என்பது உடல் வலி மை, கலை நுணுக்கம், நெகிழ்வுத் தன்மை, மனவலிமை ஆகியவற்றின் அற்புதக் கலவையாகும். இதில், ருமேனியாவின் நாடியா கோமனேசி ஒலிம்பிக்கில் வரலாறு படைத்தார். அவை தொடர்ந்து, சிமோன் பைல்ஸ், 25  முறை உலக சாம்பியன்ஷிப், 7 ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்று, விளையாட்டு உலகில் பாலியல் பாதுகாப்புக்கும் குரல் கொடுத்தார். நீச்சல் பேரரசி அமெரிக்கவின் கேட்டி லெடெக்கி, ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டி யில் அதிக விருதுகளை வென்ற பெரு மைக்குரியவர். 15 வயதிலேயே தங்கம் வென்ற இவர், தொடர்ச்சியாக 5 முறை ஆண்டின் சிறந்த நீச்சல் வீராங்கனை யாகத் தேர்வு செய்யப்பட்டார்.  மின்னல் வேங்கை 5 அடி உயரமே இருந்தாலும், “பாக்கெட் ராக்கெட்” என்ற செல்லப் பெயருடன் உலகையே திகைக்க வைத்தவர் ஜமைக்கா ஓட்டப்பந்தய வீராங்கனை  ஷெல்லி-ஆன். 4 முறை 100 மீட்டர்  உலகப் பட்டங்களை வென்று, 2008  முதல் 2015 வரை உலகின் வேகமான பெண்ணாக விளங்கினார். நெதர்லாந் தைச் சேர்ந்த பேனி பிளாங்கர்ஸ்-கோன், ஒரே ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்று அதி சயமாக விளங்கினார். அமெரிக்காவின் ஜாக்கி ஜாய்னர்- கெர்சி, ஹெப்டத்லான், நீளம் தாண்டு தலில் ஆதிக்கம் செலுத்தி 3 ஒலிம்பிக் தங்கங்களை வென்று, எல்லாக் காலத்தி லும் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆலிசன் பெலிக்ஸ், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 13  தங்கம் வென்ற வரலாற்றில் மிகவும் அலங்கரிக்கப்பட்ட தடகள வீராங்க னை ஆவார். ரஷ்யாவின் எலெனா இசின் பயேவா, போல் வால்ட்டில் புதிய உயரங்களை எட்டியவர். பல்துறை மேதைகள் பேப் டிட்ரிக்சன் ஜஹாரியாஸ், தட களம், கோல்ப், கூடைப்பந்து என பல விளையாட்டுகளில் சிறந்து விளங்கி 2 ஒலிம்பிக் தங்கங்களை வென்றவர்.  இவரது பன்முகத் திறமை இன்றும் வியப்பூட்டுவதாக உள்ளது. அன்னிகா சோரென்ஸ்டாம், 95 சர்வதேச போட்டிக ளில் வெற்றிகளுடன் பெண் கோல்ப் வீரர்களில் மிகச் சிறந்தவராக வலம் வருகிறார். இந்திய பேட்மிண்டனின்  சாய்னா நேவால், ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். பிரிட்டிஷ் சைக்கிள் ஓட்டும் வீராங்கனை டேம் லாரா கென்னி, 3 ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கம் 2 வெள்ளி வென்றுள்ளார். நெதர்லாந்து வேக ஸ்கேட்டர் ஐரீன் வுஸ்ட், 5 வெவ் வேறு ஒலிம்பிக் போட்டிகளில் 5 தங்கம் வென்ற முதல் ஒலிம்பியன் என்ற அபூர்வ பெருமையைப் பெற்றுள்ளார். லிண்ட்சே  வோன், ஆல்பைன் ஸ்கை பந்தயத்தில் ஏராளமான உலகக் கோப்பை பட்டங்களு டன் பனிச்சறுக்கின் ராணியாக விளங்கு கிறார். கால்பந்தின் சிங்கங்கள் பிரேசில் வீராங்கனை மார்டா, இது வரை இல்லாத சிறந்த பெண் கால்பந்து  வீராங்கனை என்று பரவலாகக் கருதப் படுகிறார். மியா ஹாம், 2 முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்று, அமெரிக்க மகளிர் கால்பந்துக்கு அடித்தளமிட்ட வர்.  ஸ்பானிய வீராங்கனை ஐதானா போன்மாட்டி, 2025 ஆம் ஆண்டின் சிறந்த  மகளிர் வீராங்கனை விருதை வென்றுள் ளார். கிரிக்கெட் வானவில் மிதாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட் டில் இந்தியாவின் பெருமையாக விளங்குகிறார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி, உலகின் சிறந்த ஆல்- ரவுண்டராக வளம் வந்து கொண்டி ருக்கிறார். இந்த வீராங்கனைகளின் பயணம் வெறும் பதக்கங்களையும் பட் டங்களையும் வென்ற கதைகள் மட்டு மல்ல. சமூகத்தில் பெண்களுக்கு இருந்த சங்கிலிகளை உடைத்து, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணங்கள். இந்த மாற்றம் ஒரே இரவில் நடக்க வில்லை, கடின உழைப்பாலும் தியாகத் தாலும் படிப்படியாகக் கட்டியமைத்த சாதனையாகும்.  எதிர்கால தலைமுறை களுக்கு வழிகாட்டியாக என்றென்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.  - சி.ஸ்ரீராமுலு