இந்தியா - நியூஸி., கிரிக்கெட் போட்டி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸி லாந்து கிரிக்கெட் அணி, தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் கடைசி போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் (காரிய வட்டம் கிரீன்பீல்ட் மைதானம்) ஜனவரி 31 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த போட்டியை காண மாணவர்களுக்கு கேரள கிரிக்கெட் சங்கம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ஆயி ரக்கணக்கான ரூபாய் மதிப்புக் கொண்ட டிக்கெட்டை மாணவர் களுக்கு ரூ.250ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரள கிரிக் கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறி விப்பில்,”கேரள மாநில கல்வி நிறு வனங்கள் மூலமாக குழு முன்பதிவு களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். டிக்கெட் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், அதன் தலைவர் சான்றளித்த அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் கோரிக்கை மனுவை generalconvener@keralacricket.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்து டன் மாணவர்களின் முழுப் பெயர் மற்றும் பள்ளி/கல்லூரி அடையாள அட்டை எண்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தது 10 மாணவர்கள் இருக்க வேண்டும். 16 வயதிற்குட்பட்ட மாண வர்களுடன் ஒரு ஆசிரியர் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு 10 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் களுக்கும் ரூ.250 விலையில் டிக்கெட் அனுமதிக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது. பாராட்டு மற்ற மாநில கிரிக்கெட் சங்கங்கள் வருவாயை மட்டுமே முதன்மையாக கொண்டு கிரிக்கெட் போட்டியை நடத்தும் நிலையில், மாணவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்த கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இன்று 2ஆவது டி-20 போட்டி
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி நாக்பூரில் புதனன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது டி-20 போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.
இந்தியா - நியூஸிலாந்து இடம் : எஸ்.வி.என். மைதானம், ராய்ப்பூர், சத்தீஸ்கர் நேரம் : இரவு 7 மணி / சேனல் ; ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஒடிடி)
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சின்னர் முன்னேற்றம்
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டி யான ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 114ஆவது சீசனில் தற்போது ரவுண்ட்ஸ் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு 2ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரி சையில் இல்லாத ஆஸ்திரேலியாவின் டக்வொர்த்தை 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அதே போல தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் இல்லாத இத்தாலியின் பிரான்சிஸ் கோவை 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் செல்டான் (அமெரிக்கா), பிரிட்ஸ் (அமெரிக்கா), மரீன் சிலிச் (குரோ ஷியா), வாவ்ரிங்கா (சுவிஸ்), முஸ்ஸட்டி (இத்தாலி), காச்சானோவ் (ரஷ்யா).
ஒசாகா கலக்கல்
மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் இல்லாத செக்குடியரசின் பவுஸ்கோவாவை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3ஆவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். தரவரிசையில் 16ஆவது இடத்தில் உள்ள முன்னணி வீராங்கனையான ஜப்பானின் ஒசாகா 6-3, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் கிறிஸ்டியை வீழ்த்தி, 3ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 3ஆவது சுற்றுக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் : அனிஸ்மோவா (அமெரிக்கா), நோஸ்கோவா (செக்குடியரசு), கலின்ஸ்கயா (ரஷ்யா), பெகுலா (அமெரிக்கா), கீஸ் (அமெரிக்கா).
