பெருநிறுவனங்களுக்கும் பணக்காரர்களுக்கும் ஆதரவான ஒன்றிய பட் ஜெட் 2025-26 விவசாயிகள், தொழி லாளர்கள் மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் பட்ஜெட் என அகில இந்திய விவ சாயிகள் சங்க தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச்செயலா ளர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் தின் பங்கு 16% ஆக உயர்ந்துள்ள நிலையிலும், விவசாயம் மற்றும் சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு 2024-25 ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பீட்டை விட குறை வாக உள்ளது. 2024-25இல் ரூ. 3,76,720.41 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு 2025-26இல் ரூ.3,71,687.35 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்திற்கான நிதி ரூ.15,864 கோடி யிலிருந்து ரூ.12,242.27 கோடியாக வெட்டப்பட்டுள்ளது. உர மானியம் ரூ.1,71,298.50 கோடியிலிருந்து ரூ. 1,67,887.20 கோடியாக, அதாவது ரூ. 3,411.30 கோடி குறைக்கப்பட்டுள் ளது. குறைந்தபட்ச ஆதார விலை க்கு சட்ட உத்தரவாதம் வழங்க, கொள்முதலை விரிவுபடுத்த அல் லது விவசாயிகளை கடன் சுமை யிலிருந்து விடுவிக்க எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்து ரைத்த லாபகரமான விலை நிர்ண யமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பருப்பு வகைகளுக் கான தன்னிறைவு திட்டத்திற்கு வெறும் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே அரசு 10 நாட்களுக்கு முன்பு துவரம் பருப்பு இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளது. மொசாம்பிக் போன்ற நாடுகளில் விவசாயிகளை ஊக்குவிக்கிறது. 2024இல் பருப்பு இறக்குமதி இரட்டிப்பாகி 60 லட் சம் டன்களை எட்டியுள்ளது. ரப்பர் விலை நிலைப்படுத்தும் நிதியம் மற்றும் வனவிலங்குகளால் ஏற் படும் பாதிப்புகளை சமாளிக்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதி ராக பிப்ரவரி 5ஆம் தேதி நாடு முழு வதும் பட்ஜெட் பிரதிகளை எரித்து போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் தொழிற்சங்கங்க ளின் கூட்டு போராட்டத்தை வெற்றி கரமாக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.