மதுரை, ஜூன் 24- கொரோனா பரவுவதைத் தடுக்க மதுரையில் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் வாகனங் களில் வலம் வந்தால் அவற்றை பறி முதல் செய்ய 10 சிறப்பு படைகள் அமைக்கப் பட்டுள்ளது. மதுரையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மதுரை, கீழமாசிவீதி, விளக் குத்தூண், கோரிப்பாளையம், காமராஜர் சாலை, மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுச்சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகள் வெறிச் சோடிக் காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிர தான பேருந்து நிலையங்களான ஆரப் பாளையம், பெரியார் பேருந்து நிலையம் மூடப்பட்டன. மக்கள் வெளியே வருவதைக் கண் காணிக்க சிறப்புப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங் களில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர். மாநகரின் முக்கிய பாலங் கள் அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்களில் தேவை இல்லாமல் மக் கள் வெளியே வந்தால் அவர்கள் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை மாநகரில் உள்ள இருபது காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான காய்கறி கள், மளிகைப் பொருட்களை தங்களது காவல் நிலைய எல்கைக்குள் உள்ள கடை களில் மட்டுமே வாங்கவேண்டும். மீறு பவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ் நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டங்களின் கீழ் வழக்கு கள் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.