திருப்பூர், ஜூலை 12- திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காண பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்வடைந்துள் ளது. இந்நிலையில், நோய் பரவல் தீவிரத்தை தடுக்கும் வகை யில், ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுகிழமைகளி லும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலாக்கப்படும் என தமி ழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழ மையான 12ஆம் தேதி மாவட்டத்தின் அனைத்து கடை களும் அடைக்கப்பட்டிருந்தது. மாநகரின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகள் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வெளியில் சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் பிடித்து, அவர்களது வாகனங்களைப் பறிமு தல் செய்தனர்.
50க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் துறை யால் பிடித்து வைக்கப்பட்டனர். ஊரடங்கு சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேரம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தா லும் சில பகுதிகளில் நள்ளிரவு தொட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 8 மணி வரை கோழிக்கறி, ஆட்டு இறைச்சி மற் றும் மீன் கடைகள் திறந்து வைக்கப்பட்டு விற்பனை நடை பெற்றது. அதேபோல், சில பகுதிகளில் டாஸ்மாக் கடை கள், மது பார்களிலும் வழக்கம்போல ரகசிய விற்பனை நடை பெற்றது.